Published : 06 Oct 2020 08:51 AM
Last Updated : 06 Oct 2020 08:51 AM
நேற்று துபாயில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2020 போட்டியில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் 9000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
தனது 10வது ரன்னை நேற்று எடுத்த போது இந்த மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. 5 சதங்கள் 65 அரைசதங்கள் இதில் அடங்கும் ஸ்ட்ரைக் ரேட் 134.25.
கிறிச் கெய்ல் 13,296 ரன்களையும், கிரன் பொலார்ட் 10,370 ரன்களையும், ஷோயப் மாலிக் 9,926 ரன்களையும், பிரெண்டன் மெக்கல்லம் 9,922 ரன்களையும், டேவிட் வார்னர் 9,451 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 9,148 ரன்களையும் எடுத்து முன்னிலையில் உள்ளனர்.
சாதனையிலும் ஏற்பட்ட சோதனை:
கரோனா காரணமாக பந்தின் மீது எச்சில் தடவினால் அது கரோனா விதிமுறைகளை மீறிய செயல். இந்தத் தவற்றை ஒரு போட்டியில் 3 முறை செய்தால் அந்த அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் ஆண்டாண்டு கால பழக்கத்தை வீரர்கள் எளிதில் மறந்து விட முடியுமா? முதலில் ராபின் உத்தப்பா பந்தில் எச்சில் தடவி சிக்கினார்.
நேற்று கோலியும் இதே தவறைச் செய்தார், டெல்லிக்கு எதிராக 3வது ஓவரை வீசினார் நவ்தீப் சைனி. பிரிதிவி ஷா அடித்த பந்தை கோலி பீல்டிங் செய்தார், ஆனால் பழக்கதோஷத்தில் பந்தில் எச்சில் தடவினார். உடனே சுதாரித்த கோலி கையை பின்னால் இழுத்தார் சிரித்துக் கொண்டே. பிறகு நடுவரைப் பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT