Published : 04 Oct 2020 04:49 PM
Last Updated : 04 Oct 2020 04:49 PM
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் 2020-ல் அட்டவணையில் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று கொல்கத்தாவின் மோர்கன், ராகுல் திரிபாதி மிரட்டல் அதிரடியையும் தாண்டி வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிடல்ஸின் கேப்டனும் மும்பை வீரருமான ஸ்ரேயஸ் அய்யர் தன்னை ஒரு வரப்பிரசாதமான திறமை கொண்ட வீரராகக் கருதவில்லை மாறாக சாமர்த்தியமும் கடின உழைப்பும் கொண்ட வீரராகவே தன்னைக் கருதுவதாகத் தெரிவித்தார்.
நேற்று அய்யர் 38 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார், 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அதில் அடங்கும்.
இந்நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் நேற்றைய வெற்றி குறித்துக் கூறியதாவது:
ஷார்ஜாவில் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் தடுப்பது கடினம், பெரிய ரன்களை குவித்தோம், இருந்தாலும் போதாமல் போயிருக்குமோ என்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை.
என் பேட்டிங்கைப் பொறுத்தவரை சிறிய மைதானம் என்பதால் பவுலர்களை அடித்து ஆட முடிவு செய்தேன். ஒரு சிக்ஸ் என்ற நோக்கத்தில்தான் ஆடுவேன்.
நான் வரப்பிரசாதமான திறன் கொண்ட வீரன் அல்ல, மாறாக கொஞ்சம் கடின உழைப்பு, கொஞ்சம் சாமர்த்தியம் கலந்த வீரன் தான்.
நாம் தொடர்ந்து நெருக்கமான போட்டிகளைப் பற்றி பேசி வருகிறோம், இதுவும் அத்தகைய போட்டிதான். நெருக்கமான போட்டிகளை வெல்வது மனநிறைவைத் தருகிறது..
ஆனாலும் ஷார்ஜாவில் நாம் எதையும் சொல்ல முடியாது. இங்கிருந்து இனி தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும், ஆமாம், என்றார் அய்யர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT