Published : 28 Sep 2020 09:45 AM
Last Updated : 28 Sep 2020 09:45 AM
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து நேற்று ஒரே நாளில் ஹீரோவான ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேஷியா, ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் ஆச்சரியம்தான் என்றார்.
ஆனால் அணி வீரர்கள் தான் நீள நீளமான சிகர்களை அடிக்கக் கூடியவர் என்று தன்னை நம்பியதாக திவேஷியா தெரிவித்தார்.
மே.இ.தீவுகள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரல் வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார் திவேஷியா. அதுவும் 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற கிட்டத்தட்ட வெற்றி அசாத்தியமே என்ற சூழலில் அடித்து ஆட்டத்தையே மாற்றினார்.
திவேஷியா முதலில் மிகவும் போராடினார் 13 பந்துகளில் 5 ரன்கள் 19 பந்துகளில் 8 ரன்கள் என்று 2014 டி20 உ.கோப்பையில் யுவராஜ் சிங் திணறியது போல் திணறினார், முன்னால் இறக்கியது வீண் என்று பலரும் நினத்த தருணத்தில் சீறிப்பாய்ந்தார்.
31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசி ராஜஸ்தானை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
“நான் நீள நீளமான சிக்சர்களை அடிக்கக் கூடியவன் என்பதை சகவீரர்கள் அறிவார்கள். நான் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரியும். ஒரு சிக்ஸ் வந்தால் போதும் பிறகு சரமாரியாக வரும் என்று எனக்குத் தெரியும்.
ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் உண்மையில் ஆச்சரியகரமானதுதான். லெக் ஸ்பின்னர் ஓவரில் அடிக்கப் பார்த்தேன் துரதிட்ஷ்டவசமாக முடியவில்லை. எனவே மற்ற பவுலர்களை அடித்தேயாக வேண்டும்.
முதல் 20 பந்துகள் நான் மிக மோசம். அதன் பிறகு அடிக்க ஆரம்பித்தேன் அனைத்தும் நல்லதாக முடிந்தது” என்றார் ராகுல் திவேஷியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT