Published : 25 Sep 2020 09:16 AM
Last Updated : 25 Sep 2020 09:16 AM
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 6வது போட்டியில் ஒரு கேப்டனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இந்திய வீரர் கே.எல்.ராகுல் அணியை முன்னின்று வழிநடத்தினார்.
லோகேஷ் ராகுல் 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என்று 132 ரன்களில் 98 ரன்களை 21 பந்துகளில் விளாசினார். இவரது அதிரடியில் பஞ்சாப் அணி 206/3 என்று ரன் குவித்தது, தொடர்ந்து ஆடிய ஆர்சிபி முருகன் அஸ்வின், பிஸ்னாய், காட்ரெல் பந்து வீச்சில் 109 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் வெற்றி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குக் கூறிய கே.எல்.ராகுல், “ஒட்டுமொத்த அணியின் திறன் வெளிப்பாடாக அமைந்தது.
நான் அவ்வளவு நம்பிக்கையாக இல்லை, மேக்ஸ்வெலுடன் பேசினேன். நான் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதவில்லை. கொஞ்சம் பதற்றமாகத்தான் ஆடினேன், ஆனால் ஒரு சில பந்துகளை எதிர்கொண்டால் நிலை பெற்று விடலாம் என்று தெரியும்.
டாஸ் போடச் செல்லும் வரை நான் கேப்டனாக என்னை எண்ணவில்லை, வீரராகவே உணர்ந்தேன். ரவி பிஸ்னாய்க்கு பரந்த இதயம். அவரிடம் நிறைய போராட்டக் குணம் உள்ளது.
ஒவ்வொரு முறை அவரிடம் பந்தை அளித்த போதும் போராட்டக்குணத்தை வெளிப்படுத்தினார். பிஞ்ச், ஏபி டிவில்லியர்சுக்கு வீசும் போது கொஞ்சம் பயந்தார். ஆனால் அவர் போராட்டக்குணம் படைத்தவர், பரந்த இதயம் படைத்தவர் என்பதுதான் அவரது பவுலிங் வெற்றிக்குக் காரணம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT