Published : 20 Sep 2020 08:32 AM
Last Updated : 20 Sep 2020 08:32 AM
அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோனி தலைமை சிஎஸ்கே அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை (12), பியூஷ் சாவ்லாவின் லெக் ஸ்பின்னை வைத்து தோனி அழகாக வீழ்த்த வியூகம் அமைத்து வெற்றி பெற்றார். அதே போல் சாம் கரனை மீண்டும் பவுலிங் செய்ய அழைத்து அதிரடி அபாய வீரர் குவிண்டன் டி காக் (33) விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
லுங்கி இங்கிடி முடிவில் நன்றாக வீச மும்பை இந்தியன்ஸ் அணி 162/9 என்று முடிந்தது. சிஎஸ்கே அணி 6/2 என்ற நிலையிலிருந்து ராயுடு, டுபிளெசிஸின் அபார அரைசதங்கள் மூலமும் கடைசியில் சாம் கரன் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசியதும் சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்தது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து ரோஹித் சர்மா கூறியதாவது:
டுபிளெசிஸ், ராயுடு போல் செட்டில் ஆன பிறகு பேட்ஸ்மென் மேலே கொண்டு சென்றிருக்க வேண்டும், நாங்கள் இதைச் செய்யத் தவறினோம்.
சிஎஸ்கே பவுலர்களுக்குப் பாராட்டுகள், எங்களை எப்போதும் ஒருவிதமான ஐயத்தில் வைத்திருந்தனர். நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். கற்றுக்கொள்ள வேண்டும். மைதானத்தில் எங்களை ஊக்குவிக்க ரசிகர்கள் இல்லாதது எங்களுக்குப் பழக்கமானதல்ல. ஆனால் மைதானத்தில் சிலபல சப்தங்களை கொண்டு வந்ததில் ஐபிஎல் பிரமாதமாக யோசித்தது.
பனிப்பொழிவுக்குப் பிறகு பிட்ச் நன்றாக இருந்தது. பெரிய மைதானங்களில் நாங்கள் விளையாடியதில்லை என்பதில்லை. களவியூக இடைவெளிகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சிங்கிள், இரண்டுகள் எடுக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து செய்ய வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT