Published : 19 Sep 2020 07:33 PM
Last Updated : 19 Sep 2020 07:33 PM

ஐபிஎல் 2020: டாஸ் வென்றது சிஎஸ்கே அணி: ஆடுகளம் எப்படி?

கோப்புப்படம்

13-வது ஐபிஎல் சீசனில் அபுதாபியில் இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 13-வது சீசன் ஐபிஎல் போட்டி தொடங்கிவிட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த இரு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலும் சிஎஸ்கே அணிதான் முதல் ஆட்டத்தை எதிர்கொண்டது. இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது. 2018-ம் ஆண்டு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், 2019-ம் ஆண்டில் ஆர்சிபி அணியையும் தோனி படை தோற்கடித்துள்ளது. ஆதலால், இந்த முறை முதலாவது ஆட்டத்தில் மும்பையை வெல்லுமா என்று பார்க்கலாம்.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கும், மிதவேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால், அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களை தோனி தேர்வு செய்துள்ளார். அணியில் டுவைன் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை.

வேகப்பந்தவீ்ச்சுக்கு லுங்கி இங்கிடி, ஆல்ரவுண்டர் சாம் கரன், தீபக் சாஹர் மூவரும் இருக்கின்றனர். தமிழக வீரர் முரளி விஜய் இடம் பெற்றுள்ளதால், வாட்ஸனுடன் சேர்ந்து தொடக்கவீரராகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட், டிரன்ட்போல்ட், பட்டின்ஸன், டீ காக் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆடுகளம் எப்படி?

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 44 டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன. இந்த முறை ஐபிஎல் தொடரில் 20 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்த மைதானம் மிதவேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சம பங்கு ஒத்துழைக்கும். ஐக்கிய அரபு அமீரக அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் ரோஹன் முஸ்தபா 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

இந்த மைதானம் பெரும்பாலும் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்துள்ளது கடந்தகாலப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானம் ஏற்றதாகும்.

இந்த மைதானத்தில் ஓவருக்குச் சராசரியாக 7 ரன்கள் வரை சேர்க்க முடியும். ஒரு அணி சராசரியாக 150 ரன்களுக்குக் குறைவில்லாமல் சேர்க்க முடியும்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 225 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 87 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 166 ரன்களாகும். 129 ரன்கள் சேர்க்கப்பட்டு அதற்குள் எதிரணி சுருட்டப்பட்டுள்ளதுதான் குறைந்தபட்சத்தில் வெற்றி பெற்ற ஸ்கோராகும்.

இந்த மைதானத்தில் இதுவரை 44 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 25 போட்டிகள் 2-வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன.

சிஎஸ்கே அணி விவரம்:

தோனி (கேப்டன்), வாட்ஸன், முரளி விஜய், டூப்பிளசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், சாம் கரன், லுங்கி இங்கிடி.

மும்பை இந்தியன்ஸ் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), குயிந்டன் டீ காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்ஸன், ராகுல் சாஹர், டிரன்ட் போல்ட், பும்ரா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x