Last Updated : 09 Sep, 2015 02:30 PM

 

Published : 09 Sep 2015 02:30 PM
Last Updated : 09 Sep 2015 02:30 PM

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஓய்வு

37 வயதாகும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

டெஸ்ட் மற்றும் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது மகளுக்கு உடல் நலம் சரியில்லாததன் காரணமாக ஆஷஸ் தொடரில் இவரால் சரிவர பங்கேற்க முடியவில்லை.

30-வது வயதில்தான் ஆஸ்திரேலிய சர்வதேச அணியில் அவரால் நுழைய முடிந்தது. இந்நிலையில் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவும் புதிய டெஸ்ட் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் இனி டெஸ்ட் போட்டி வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினாலும் பிராட் ஹேடின் ஓய்வு அறிவித்ததாக தெரிகிறது.

66 டெஸ்ட் போட்டிகளில் 3,266 ரன்களை 32.98 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 169. 4 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களை எடுத்துள்ள ஹேடின் 262 கேட்ச்களை பிடித்ததோடு, 8 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 0-வில் இருந்த போது இவர் கேட்சை விட்டார். அதன் பிறகு ஜோ ரூட் 134 ரன்கள் எடுக்க இங்கிலாந்து வெற்றியில் ரூட்டின் ஸ்கோர் மிகப்பெரிய பங்களிப்பு செய்ததது.

இதனையடுத்து இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x