Published : 12 Sep 2020 04:34 PM
Last Updated : 12 Sep 2020 04:34 PM
மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த கரீபியன் கிரிக்கெட் லீக் டி20 தொடரில் தான் தலைமை ஏற்று நடத்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொடுத்தவிட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்று இணைந்தார் கெய்ரன் பொலார்ட்.
அதுமட்டும்லலாமல், கரீபியன் லீக் தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்றிருக்கும் மே.இ.தீவுகள் பலரும், அபு தாபி, துபாய் வந்து தங்கள் அணியினருடன் சேர்ந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி ஐபிஎல்டி20 போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் முனைப்பில் 8 அணிகளும் தீவிரமாக பயிறச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதில் மே.இ.தீவுகளில் நடந்த கரீபியன் லீக் டி20 தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தினார் கெய்ரன் பொலார்ட். லீக் ஆட்டங்கள் , சூப்பர் லீக் உள்ளிட்ட எதிலும் தோற்காமல் டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டரூபாவில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணியை எதிர்கொண்டது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. இதில் முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா அணி 19.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அபாரமாகப் பந்துவீசிய கேப்டன் பொலார்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
155 ரன்களைதுரத்திய டிரின்பாகோ அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு கேப்டன் பொலார்ட் முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்த தொடரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கரீபியன் லீக்கில் விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கு திரும்புயுள்ளனர்.
பொலார்ட் வருகை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தி் பதிவிட்ட செய்தியில் “ கரிபீயன் தொடரிலிருந்து அபு தாபிக்கு பொலார்ட் குடும்பத்தினர், ரூதர்போர்ட் ஆகியோர் ஒரு குடும்பமாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தனர்” எனத் தெரிவித்துள்ளது.
பொலார்டுடன், மற்றொரு மே.இ.தீவுகள் வீரர் ஷெர்பான் ரூதர்போர்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT