ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக ஐபிஎல் தொடரை தியாகம் செய்ய முடியாது: கவுதம் கம்பீர் 

ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக ஐபிஎல் தொடரை தியாகம் செய்ய முடியாது: கவுதம் கம்பீர் 
Updated on
1 min read

ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வார காலத்தில் தொடங்கவிருக்கும் நிலையிலும், 2 வீரர்கள் உட்பட 13 பேர் கரோனா பாதிப்படைந்துள்ளனர் என்றும் பிசிசிஐ கூறியதையடுத்து, தொடரை கைவிட முடியாது, அது கடினம் என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய வீரருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கம்பீர் கூறியது: “வீரர்கள் கரோனாவைக் கண்டு அஞ்சுவார்கள் என்று நான் கருதவில்லை. பயோ-செக்யூர் குமிழிக்குள் வீரர்கள் இருப்பது அவசியம். வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். ஒரேயொருவருக்காக தொடரையே தியாகம் செய்ய முடியாது. எனவே வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் எந்த ஒரு அணியையும் வீழ்த்தலாம். ஆனால் தொடரில் எப்படி தொடக்கத்தில் ஆடுகிறோம் என்பதுதான் முக்கியம். மேலும் இந்திய வீரர்கள் 6 மாதகாலமாக கிரிக்கெட் ஆடவில்லை. அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்களா இல்லையா என்பது தொடர் தொடங்கியவுடன் தெரிந்து விடும்” என்றார்.

யுவராஜ் சிங் மீண்டும் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார், ஓய்விலிருந்து வெளியே வர முறைப்படி அனுமதி கேட்டு அவர் பிசிசிஐக்கு எழுதியுள்ளது பற்றி கம்பீர் கூறும்போது, “அது அவரது சொந்த முடிவு, ஆனால் யுவி ஆடினால் எல்லோருமே விரும்பிப் பார்ப்பார்கள். எனவே பஞ்சாபுக்கு ஆடுகிறேன் என்கிறார், ஏன் கூடாது? ஓய்விலிருந்து வெளியே வந்து உத்வேகத்துடன் அவர் ஆடமுடியும் என்றால் அவரை வரவேற்பதில் தவறில்லை” என்றார் கம்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in