Published : 09 Sep 2020 01:04 PM
Last Updated : 09 Sep 2020 01:04 PM
ரன்னர் முனையில் உள்ள மட்டையாளர் பந்து வீசும் முன்பே சில அடிகள் கிரீசை விட்டு வெளியேறி நகர்ந்து வருவதால் சாதக அம்சங்கள் கூடுதலாக பேட்டிங் அணிக்குக் கிடைக்கிறது இதனால் ரன்னர் முனையில் அவ்வாறு கள்ளத்தன சகாயம் பெற நினைத்தால் பவுலிங் செய்வதற்கு முன்னாலேயே ரன் அவுட் செய்யலாம் என்ற அஸ்வினின் நியாயத்தை டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக கிரிக்கெட் ஸ்பிரிட்டுக்கு எதிரானது, அதனால் அஸ்வின் அவ்வாறு செய்யாமல் இருக்க அவரிடம் பேசுவேன், குறைந்தது டெல்லி அணியில் நாம் அவ்வாறு ரன் அவுட் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
இந்நிலையில் அஸ்வினுடன் இது தொடர்பாக திறந்த மனதுடன் விவாதித்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
அஸ்வின் இது குறித்து என்னிடம் வெளிப்படையாகப் பேசினார், இந்த விஷயத்தில் அஸ்வின் கூறுவதை ஏற்கிறேன். ஆட்டத்தில் உள்ள விதிமுறைகளின் கீழ் தான் அவர் அந்த ரன் அவுட் செய்வதாகக் கூறினார். அவர் கூறும் வாதம் சரியானதுதான்.
அஸ்வின் வாதம் என்னவெனில் கடைசி ஓவர் எதிரணிக்கு 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை, அப்போது ரன்னர் 2- அடி முன்னால் செல்கிறார் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
நானும் என் தரப்பு வாதத்தை முன் வைத்தேன், அப்படியென்றால் பந்து வீச வேண்டாம், ரன்னரை உள்ளே போகச்சொல்லி எச்சரிக்கலாம், மன்கட் செய்ய வேண்டாம் என்று நானும் வாதிட்டேன்.
ஆனால் ஒன்று ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ரன்னரோ, பேட்ஸ்மேன்களோ ஏமாற்றக் கூடாதல்லவா? உண்மையில் ரன்னர்கள் 2 அடி முன்னாலேயே சென்று ஏமாற்றுகின்றனர். இந்தப் பிரச்சினையை பேசித்தான் ஆகவேண்டும்.
எனவே ஆட்ட விதிகளில் மாற்றம் தேவை. பேட்ஸ்மென்களும் ஏமாற்றக் கூடாது. எனவே வேண்டுமென்றே ரன்னர் க்ரீசிலிருந்து வெளியே வந்தார் ரன் அபராதம் விதிக்கலாம். எது எப்படியிருந்தாலும் இந்த விஷயத்துக்கு தீர்வு வேண்டும்.
என்றார் பாண்டிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT