Published : 15 Sep 2015 07:04 PM
Last Updated : 15 Sep 2015 07:04 PM

ஹாக்கியிலிருந்து கிரிக்கெட்டுக்கு மாறிய ராகுல் திராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் ராகுல் திராவிட், சுறுசுறுப்பான ஹாக்கி வீரராகவே தனது விளையாட்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

ஹாக்கி கர்நாடகாவின் பெங்களூரு கோப்பை போட்டித்தொடர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் திராவிட், தான் ஹாக்கியை விடுத்து கிரிக்கெட்டுக்கு மாறியதை விவரித்தார்:

"நான் பள்ளிப்படிப்பின் போது செயிண்ட் ஜோசப்பில் சந்தீப் சோமேஷுடன் ஹாக்கி விளையாடினேன். நான் ஜூனியர் மட்டத்தில் ஆடிய போது சந்தீப் சோமேஷ் ஒரு ஆண்டு என்னைவிட சீனியராவார்.

என்னுடைய பயிற்சியாளர் ஷிவ்பிரகாஷ் என்னை ‘செண்டர் ஹாஃப்’ நிலையில் ஆடச் செய்தார். ஆட்டத்தை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், வாய்ப்புகளை நானே உருவாக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

ஆனால் சீனியர் மட்டத்துக்கு உயர்வடைந்த போது, சந்தீப் சோமேஷும் இருந்தார். அப்போது செண்டர் ஹாஃப் நிலையிலிருந்து என்னை ரைட் ஹாஃப் நிலைக்கு மாற்றினார் பயிற்சியாளர் ஷிவ்பிரகாஷ். அப்போது உணர்ந்தேன் ஹாக்கி விளையாட்டு எனக்கு ஒத்துவராது என்பதை. ஏனெனில் ரைட் ஹாஃப் நிலையில் என்னால் ஆகக் கூடியது என்பது இல்லை என்று தோன்றியது. அப்போது பயிற்சியாளர் ஷிவ்பிரகாஷ் கூறினார், “சந்தீப் வழியில் குறுக்கிட வேண்டாம், அவர் ஆட்டத்தை நடத்தட்டும்” என்றார்.

அப்போதே முடிவு கட்டினேன் ஹாக்கி சரிப்பட்டு வராது என்று, அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் ஆட்டத்துக்குள் வந்துவிட்டேன்” என்றார்.

சந்தீப் சோமேஷ் கூறும்போது, “திராவிட் மட்டும் ஹாக்கி விளையாடியிருந்தால் அவர் நீண்ட தொலைவு சென்றிருப்பார்” என்றார்.

தனது ஹாக்கி நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திராவிட், “எரிக் வாஸ் ஹாக்கி மற்றும் நூற்றாண்டு கோப்பை ஆகியவற்றை வென்றது ஹாக்கி பற்றிய எனது நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

எங்கள் பள்ளி வலுவான ஹாக்கி அணியாக இருந்தது, இதனால் பல போட்டித் தொடர்களை வென்றோம். ஆனால் செயிண்ட் ஜோசப் பள்ளியிடம் தோற்றிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x