Published : 04 Sep 2020 07:45 AM
Last Updated : 04 Sep 2020 07:45 AM
ஷோயப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார், உதாரணமாக விராட் கோலி, தோனி என்று அவர் புகழ்வார்.
விராட் கோலியை உண்மையிலேயே அவர் பெரிய அளவில் புகழ்கிறார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.
ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.
மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்தார்.
இப்போதெல்லாம் பொதுவாகவே, பணமழை ஐபிஎல் கிரிக்கெட் வந்த பிறகு இந்திய நட்சத்திர வீரர்களைப் புகழ்வது வழக்கமாகி வருகிறது, முன்னாள் வீரர்கள் பலர் இங்கு பயிற்சியாளர் உள்ளிட்ட வாய்ப்புகளுக்காக பார்த்து வருகின்றனர், அதுவும் குறிப்பாக கோலி, தோனியின் செல்வாக்கு என்ன என்பதையும் அறிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT