Published : 28 Aug 2020 03:50 PM
Last Updated : 28 Aug 2020 03:50 PM
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், இயன் சாப்பலின் இளைய சகோதரர், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் ஒரு கிரிக்கெட் வல்லுநர், அவர் வாயிலிருந்து ஒரு வீரர் பாராட்டைப் பெறுவது என்பது, ‘வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி’ என்று கூறுவார்களே அது போன்ற ஒரு அரிய விஷயம்.
கிரெக் சாப்பல் பயிற்சியின் கீழ் தோனி ஆடிஉள்ளார். இதனையடுத்து தோனி பற்றி ஆங்கில ஊடகம் ஒன்று க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு நபராகவும் கிரிக்கெட் வீரராகவும் அவருடனான என் பழக்கம் நேர்மறையாக இருந்தது. அவருடன் பணியாற்றுவது எளிது ஏனெனில் அவர் திறந்த மனம் படைத்தவர், சரியானவர். கபட தன்னடக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. ஒன்றை ச்செய்ய வேண்டுமென்றால் நேரடியாக அதை செய்வார்.
தோனியிடம் அசாதாரணமானது அவரது தன்னம்பிக்கையே. சூழ்ச்சிகள், கேம் ஆடுவதெல்லாம் அவரிடம் கிடையாது. நேரடியாக அனைத்தையும் சொல்வார், செய்வார்.
என் பார்வையில் சிறந்த இந்திய கேட்பன் தோனி. உலக கிரிக்கெட்டில் உயர்மட்ட கேப்டன்கள் பட்டியலான மைக் பிரியர்லி, இயன் சாப்பல், கிளைவ் லாய்ட், மார்க் டெய்லர் அந்த வரிசையில் கடந்த 50 ஆண்டுகளின் மிக உத்வேகமூட்டக்கூடிய கேப்டன் தோனி. அவரிடம் உள்ள நகைச்சுவை உணர்வை ரசித்திருக்கிறேன்.
இவ்வாறு கூறினார் கிரெக் சாப்பல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT