Published : 26 Aug 2020 09:25 AM
Last Updated : 26 Aug 2020 09:25 AM

30 வயதுக்கு மேல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: வால்ஷுக்கு அடுத்த இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து உள்நாட்டு பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலையில் தாதா பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 30 வயதுக்கும் மேல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் கார்ட்னி வால்ஷுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார்.

156 போட்டிகளில் 291 இன்னிங்ஸ்களில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன் வீட்டில புலி வெளியில எலி என்பதற்கு உகந்ததாக இங்கிலாந்தில் 89 டெஸ்ட்களில் 384 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வெளிநாடுகளில் 67 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் 10 மேட்ச்களில் 26 விக்கெடுகளையே எடுத்துள்ளார். சாதகமான தென் ஆப்பிரிக்கப் பிட்ச்களிலும் கூட 10 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 போட்டிகளில் 104 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவில் 18 போட்டிகளில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன் மே.இ.தீவுகளில் 10 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆசியாவில் மொத்தமாக 22 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். ஒரு டெஸ்ட்டுக்கு 3 விக்கெட் சராசரி கூட இல்லை.

ஆனால் 30 வயதுக்கும் மேல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளில் கார்ட்னி வால்ஷ் 81 டெஸ்ட்போட்டிகளில் 341 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆண்டர்சன் 85 டெஸ்ட் போட்டிகளில் 332 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கிளென் மெக்ரா 30 வயதுக்கு மேல் 65 போட்டிகளில் 287 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் ஹேட்லி 51 டெஸ்ட்களில் 276 விக்கெட்டுகளையும் ஆலன் டொனால்டு 47 டெஸ்ட்களில் 216 விக்கெட்டுகளையும் ஆம்புரோஸ் 215 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x