Published : 23 Aug 2020 11:26 AM
Last Updated : 23 Aug 2020 11:26 AM
முந்தைய காலக்கட்ட இந்திய டெஸ்ட் அணிகளை விட தற்போதைய விராட் கோலி தலைமை இந்திய அணி அதன் கூர்மையான பந்து வீச்சினால் மிகச்சிறந்த டெஸ்ட் அணியாக இருக்கிறது என்று முன்னாள் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப்-ல் உள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
சமநிலை என்ற அளவில் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் அணி தற்போதைய விராட் கோலி தலைமை இந்திய அணியே என்று நான் நினைக்கிறேன். திறமை, பொறுமை, பந்துவீச்சு பேட்டிங் சமநிலை என்பதில் இந்த அணி சிறந்த அணி.
எந்தப் பிட்சிலும் வெல்லக்கூடிய பந்து வீச்சு உள்ளது, பிட்ச் உள்ளிட்ட நிலைமைகளில் சாதகத்தை எதிர்பார்க்காத அணி. பேட்டிங்கைப் பொறுத்தவரை 1980களில் இருந்தது போன்ற வரிசை உள்ளது. ஆனால் இன்று விராட் கோலிக்குக் கிடைத்த பவுலர்கள் அப்போது இல்லை
நிச்சயமாக 20 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை எனில் வெற்றிபெற முடியாது, இந்த இந்திய அணியில் அத்தகைய பந்து வீச்சு உள்ளது.
20 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்துள்ளதே.
ரன்களையும் எடுக்க வேண்டும், 2018-ல் இங்கிலாந்தில் பார்த்தோம் 2017-ல் தென் ஆப்பிரிக்காவில் பார்த்தோம் நம்மால் 20 விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது, ஆனால் போதிய ரன்கள் போர்டில் இல்லை.
ஆனால் இப்போது ஆஸ்திரேலியர்களை விடவும் அதிக ரன்கள் எடுக்க கூடிய பேட்டிங் வரிசை உள்ளதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT