Published : 21 Aug 2020 05:20 PM
Last Updated : 21 Aug 2020 05:20 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடருக்காக செல்லும் 8 அணி வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 6 நாட்கள் தனிமைப்படுத்துதல், அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பால்கனியில் நின்றுதான் பேச வேண்டும் என்று பல்ேவறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ நிர்வாகம் விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை 13-வது ஐபிஎல் டி20தொடர் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.
அதேபோல போட்டியில் பங்கேற்கும் 8 அணி வீரர்களும் கடுமையாக பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பின்பே அணிக்குள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் 8 அணி வீரர்களும் 6 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த 6 நாட்களில் முதல் நாள், 3-ம் நாள், 6-ம் நாள் கரோனா பரிசோதனை எடுக்கப்படும். இந்த 6 நாட்களில் வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்றுமட்டுமே பேச வேண்டும்.
மேலும், வீரர்கள் எந்தநேரத்தில் பயிற்சியில் ஈடுபட வேண்டும், சமூக விலகலைக் கடைபிடித்து பயிற்சியில் ஈடுபடுதல், உள்ளிட்ட பயிற்சிக்கான திட்டம், வீரர்கள் உடற் பயிற்சி செய்தல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அணியின் நிர்வாகத்திடம் ஐக்கிய அரபு அமீரகம் வந்து இறங்கியவுடன் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ளபடிதான் வீரர்கள் தங்கள் பயிற்சித் திட்டமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாட்கள் தனிமை முடிந்து, கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்தால் மட்டுமே பயிற்சிக்கு செல்ல வீரர்கள் அனுதமதிக்கப்படுவார்கள். இதில் வீரர்கள் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நேற்று நண்பகல் புறப்பட்டு இரவு ஐக்கி அரபு அமீரகம் சென்று சேர்ந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் இன்று புறப்படுகின்றனர். டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகின்றனர்.
இதில் ஆர்சிபி அணி வீரர்கள் அனைவருக்கும் முதல் பரிசோதனையை முடித்துவிட்டது. அதேபோல, கிங்ஸ் லெவன் ப ஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் முதல் பரிசோதனையை முடித்து 2-ம் பரிசோதனைக்கு தயாராகிவிட்டனர்.
அணியுடன் வராமல், தனியாக வரும் எந்த அணிவரும் கண்டிப்பாக 6 நாட்கள் தனிமையும், அந்த காலக்கட்டத்தி்ல 3 முறை கரோனா பரிசோதனையும் செய்யப்படும் அதில் நெகட்டிவ் என தெரிந்தபின், சகவீரர்கள் ப ாதுகாப்பாக இருக்கும் பயோ-பபுள் எனப்படும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை சகஅணி வீரர்களை பார்க்கவோ, பேசவோ அனுமதியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT