Published : 19 Aug 2020 09:21 AM
Last Updated : 19 Aug 2020 09:21 AM
சுரேஷ் ரெய்னா அணிக்கான சிறந்த வீரர், டவுன் ஆர்டரில் கொஞ்சம் முன்னால் அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்பார் என்று முன்னாள் கேப்டன், இந்தியாவின் சுவர் ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி தோனியும் ரெய்னாவும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாக சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட்கள், 226 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 78 டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 8,000 ரன்களை எடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைத்த பெருமைகளில் ஒன்று ராகுல் திராவிட் தான் சுரேஷ் ரெய்னாவுக்கு அறிமுகத்தின் போது இந்திய அணி தொப்பியை வழங்கினார்.
பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தின் வீடியோவில் ராகுல் திராவிட் கூறியதாவது, “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளுக்கும் நிறைய அருமையான தருணங்களுக்கும் மகிழ்ச்சியான் நினைவுகளுக்கும் சுரேஷ் ரெய்னா பெரிய காரணமாக இருந்திருக்கிறார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு அபாரமானது. ” என்று புகழாரம் சூட்டியுள்ளது.
சுரேஷ் ரெய்னா உலகக்கோப்பை வெற்றியாளர், சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர். பீல்டில் ஏகபட்டது அவர் பங்களிப்பு செய்துள்ளார். அவர் அணிக்கு கொண்டு வந்த ஆற்றல், உற்சாகம் மற்றும் பீல்டிங்கில் அவர் காட்டிய சுறுசுறுப்பு அளப்பரியது.
ரெய்னா பற்றி நாங்கள் நினைப்பது ஒரு விஷயம்தான், அனைத்து கடினமான விஷயங்களையும் அவர் செய்தார் என்பதே.
கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலும் பின்வரிசையில் இறங்கினார். கடினமான இடங்களில் பீல்டிங் செய்தார், சில உதவிகரமான ஓவர்களையும் வீசியுள்ளார். இந்த வகையில் அணிக்காக உழைத்தவர் ரெய்னா. திறமையான பேட்ஸ்மேன், நல்ல பீல்டர்.
உள்ளபடியே கூற வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறங்கியிருந்தால் அவர் ரன்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும். சிஎஸ்கேவுக்கு அவர் ஆடிய விதம் இதை பறைசாற்றுகிறது. நம்பர்3 யில் ஆடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஒரு பெரிய வீரர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த அறிமுக சதத்துக்குப் பிறகே அவர் அந்தத் தன்மையை கட்டமைத்துக் கொள்ளவில்லை, ஆனால் குறைந்த ஒவர் கிரிக்கெட்டில் உண்மையில் அவர் கைதேர்ந்தவர். வெற்றிகரமான இந்திய ஒருநாள் அணியில் ரெய்னா ஓர் அங்கம்.” இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்.
ஒரு முறை மோசின் கான் ஓய்வு அறிவித்த போது இம்ரான் கான் கேட்டுக் கொண்டார் வேண்டாம், உனக்கு இன்னும் ஆட்டம் இருக்கிறது என்றார். மோசின் கானும் வெளியே வந்தார், வந்து சதம் அடித்தார்.
அது போல் இந்திய கேப்டன் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் சுரேஷ் ரெய்னாவை 33 வயதில் ஓய்வு பெற அனுமதித்திருக்கக் கூடாது, இன்னும் 4 ஆண்டுகள் அவர் திறம்பட டி20 கிரிக்கெட்டில் பங்களிப்பு செய்திருக்க முடியும் என்பதே நம் துணிபு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT