Published : 16 Aug 2020 09:57 AM
Last Updated : 16 Aug 2020 09:57 AM

‘முதல் நாள் செய்த பிரியாணி போதும்’- தோனி தன் வீட்டுக்கு வந்த நாளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூரும் ஓஜா

பிராக்யன் ஓஜா வீட்டிற்கு தோனி வந்த போது. | படம்: சிறப்பு ஏற்பாடு.

தோனி ஒரு எளிமையான மனிதர் என்று அவர் ஓய்வு குறித்து கூறிய இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா தோனி தன் வீட்டுக்கு வந்து செலவிட்ட நாளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

கிரிக்கெட்டில் அனைத்து கால சிறந்த வீரர், ஆனால் உண்மையில் வாழ்வில் சிறந்த மனிதராக இருப்பவர்.

தோனி தன் வீட்டுக்கு வந்த தினத்தின் போது, ‘உங்களுக்கு லஞ்ச் என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். ‘முதல் நாள் செய்த பிரியாணி இருந்தால் போதும் அதுதான் ருசியாக இருக்கும்’ என்றார் ஓஜா நெகிழ்ச்சியுடன்.

ஹைதராபாத்தில் என் புது வீட்டுக்கு தோனி வந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். என் வீட்டுக்கு தோனி வந்தது நினைவில் உள்ளது, அவருடன் தனிப்பட்ட முறையில் உறவு வைத்திருக்கும் ஒருசிலரில் நானும் ஒருவன்.

நேர்மையாகவே நான் அவருக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன். அவர் எப்போதும் பவுலர்களின் கேப்டன். பவுலர்களை ஆதரிப்பவர்.

அணியில் இருக்கும்போது மாலை வேளைகளில் வீரர்களுடன் அரட்டை அடிப்பார். ஆனால் அது வெறும் அரட்டை அல்ல, அணியை ஒன்றிணைப்பது, பிணைப்பை ஏற்படுத்துவது என்பதை நாங்கள் பிறகு உணர்வோம். அவர் அற்புதமான ஒரு தலைவர்.

எம்.எஸ்.தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உண்மையான நிகழ்வு அவர், என்று கூறினார் பிராக்யன் ஓஜா.

-தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x