Published : 14 Aug 2020 10:50 AM
Last Updated : 14 Aug 2020 10:50 AM
சியால்கோட்டில் விதைத்த விதை மான்செஸ்டரில் முளைத்தது என்று தன் டெஸ்ட் முதல் சதம் குறித்து சச்சின் நெகிழ்ச்சியாக நினைவுகூர்ந்தார்.
ஆகஸ்ட் 14, 1990-ல் சச்சின் டெண்டுல்கர் இந்திய சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் சதத்தை (119 நாட் அவுட்) எடுக்க டெஸ்ட் ட்ரா ஆனது, இங்கிலாந்து வெற்றி தடுக்கப்பட்டது.
தன் முதல் சதத்தையும்., அது சுதந்திரதினத்துக்கு முதல்நாளாக இருந்ததையும் சச்சின் டெண்டுல்கர் நினைவுகூர்கையில் கூறியதாவது:
ஆகஸ்ட் 14ம் தேதி அந்த முதல் சதத்தை எடுத்தேன். அடுத்த நாள் நம் சுதந்திர தினம், எனவே அது ஸ்பெஷல்
ஒரு டெஸ்ட் போட்டியை ட்ரா செய்யும் கைவினைத் திறன் எனக்கு புதிய அனுபவம். சியால்கோட்டில் என் மூக்கில் பவுன்சரில் காயம் ஏற்பட்டது, நான் 57 ரன்கள் எடுத்தேன் 38/4 என்ற நிலையிலிருந்து டெஸ்ட்டைக் காப்பாற்றி ட்ரா செய்தோம்.
வக்கார் யூனிஸின் பவுன்சரில் பட்ட காயம், வலியுடன் ஆடியது என்னை வடிவமைத்தது. அப்படிப்பட்ட அடியை வாங்கும் ஒருவர் ஒன்று வலுவாக மாறுவார்கள் இல்லையெனில் காணாமல் போவார்கள்.
டெவன் மால்கம், வக்கார் யூனிஸ் இருவரும் அந்தக் காலக்கட்டத்தில் நல்ல வேகம் வீசக்கூடியவர்கள், மணிக்கு 90 மைல் வேகம் வீசக்கூடியவர்கள், நான் வலியில் இருந்தேன் ஆனால் மருத்துவரை அழைக்கவில்லை, காரணம் நான் வலியில் இருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியக் கூடாது, என் வலி அதிகம்தான்.
அடி வாங்கிவிட்டோம், வலியை எதற்காக வெளியில் காட்ட வேண்டும், பவுலருக்குக் காட்ட வேண்டும். அச்ரேக்கர் சார் பயிற்சியில் இது போன்று உடலில் அடி வாங்கும் பந்துகளை நிறைய எதிர்கொண்டு பழக்கமாகி விட்டேன். மேட்ச் ஆடிய பிட்சில் நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவோம். பந்துகள் எகிறி என்மூக்கைப் பதம் பார்க்கும்.
உண்மையில் சொல்லப்போனால் பந்தை மேலே தூக்கிப் போட்டு அது கீழே இறங்குகையில் உடலில் வாங்கிக் கொண்டு வலிக்குப் பழகினேன்.
ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட்டில் கிறிஸ் லூயிஸ் பெரிய இன்ஸ்விங்கர்களை வீசிக் கொண்டிருந்தார். என் கரியர் முழுதுமே பேக் ஃபுட் கவர் ட்ரைவ்தான் எனக்குப் பிடித்த ஷாட். அந்த இங்கிலாந்து தொடரில் பெரிய பவுலர் ஆங்கஸ் பிரேசர், அருமையான அவுட் ஸ்விங்கர்களை அவர் கைவசம் வைத்திருந்தார். கையை உயர்த்தி வீசுவார் பந்து பிட்ச் ஆகி லேட் ஸ்விங் ஆகும்.
மனோஜ் பிரபாகர் காட்டிய பொறுமை அபாரமானது. கடைசி ஓவர் ஆட்டத்தை காப்பாற்றி விடுவோம் என்று நினைக்கவில்லை. 6 விக்கெட்டுகள் விழுந்த பிறகு ஒன்றிணைந்தோம் நானும் பிரபாகரும். நானும் அவரும் ஆட்டத்தை நாம் காப்பாற்ற முடியும் என்று உறுதி பூண்டோம்.
இங்கிலாந்தும் நெருக்கமான களவியூகம் அமைத்தனர்.
எனக்கோ 17 வயதுதான் ஆட்ட நாயகன் விருதுக்கு ஷாம்பேய்ன் கொடுத்தார்கள். குடிக்கும் வயதை கூட நான் எட்டியிருக்கவில்லை. மூத்த வீரர்கள் கிண்டல் செய்வார்கள். இன்னொரு விஷயம் சஞ்சய் மஞ்சுரேக்கர் என் சதத்துக்காக ஒரு வெள்ளை ஷர்ட்டை பரிசாக அளித்தார், அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment