Published : 28 Jul 2020 03:04 PM
Last Updated : 28 Jul 2020 03:04 PM
ஆர்கே ஷோவில் பங்கேற்ற இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், தோனியின் திறமையை கங்குலிக்கு முன்னதாகவே திலிப் வெங்சர்க்கார் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறும் போது, தோனி ஒரு தனித்துவமான மனிதர், எதற்குமே அவருக்கென்று ஒரு வழி இருக்கும் அது தனிவழிதான்.
ஒருமுறை இந்தியா ஏ தொடருக்காக ஜிம்பாப்வே, கென்யா சென்ற போது தோனியும் நானும் அந்த அணியில் இருந்தோம். அப்போது திலிப் வெங்சர்க்கார் பிசிசிஐ புதிதாக உருவாக்கிய திறன் கண்டுப்பிடிப்பு பிரிவில் தலைவராக இருந்தார். இது ஜக்மோகன் டால்மியாவினால் உருவாக்கப்பட்ட ஏற்பாடு.
அப்போது தோனியின் திறமைகளை முதன் முதலில் கண்டுப்பிடித்தவர் திலிப் வெங்சர்க்கார்தான், என்றார் தினேஷ் கார்த்திக். பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனபோது தோனிக்கு வழிவிட நேரிட்டது.
இந்திய அணியில் தன் இடம் போனதைப் பற்றி தன்னால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை என்று கூறிய தினேஷ் கார்த்திக் டெஸ்ட் தொடக்க வீரராகவும் மிடில் ஆர்டரில் இறங்கவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். வாசிம் ஜாபருடன் இங்கிலாந்தில் தொடக்க வீரராக இறங்கி இருவரும் அந்தத் தொடரில் தொடக்க கூட்டணி சராசரி 50 ரன்கள் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் தொடருக்கு தோனியை தேர்வு செய்ய கூறியதாக கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். கங்குலியும் திலிப் வெங்சர்க்காருமே தோனி பற்றி ஏற்கெனவே விவாதித்துள்ளனர்.
தோனியை மட்டுமல்ல இன்று உலக கிரிக்கெட்டை கலக்கி வரும் விராட் கோலியின் திறமையையும் அடையாளம் கண்டு அவரை அணியில் தேர்வு செய்ய வைத்தவர் திலிப் வெங்சர்க்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT