Published : 24 Jul 2020 04:55 PM
Last Updated : 24 Jul 2020 04:55 PM

ஷாகித் அப்ரீடிக்கு பேட்டிங்கும் வராது, பவுலிங்கும் முடியாது: முன்னாள் வீரர் அமீர் சோஹைல்  கருத்து

1999 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான், கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுமோசமாகத் தோல்வியடைந்து இறுதிப்போட்டி என்ற பரபரப்பு விறுவிறுப்பு எதுவும் இல்லாமல் சொதப்பி தோற்றனர்.

இது தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் அமீர் சோஹைல் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

அதாவது கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டிங் வரிசையை செட்டில் ஆகவே விடவில்லை, மாற்றிக் கொண்டேயிருந்தார், இதனால் பேட்டிங் சொதப்பத் தொடங்கியது.

இந்நிலையில் இறுதிப் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற போது முதல் நாள் பெய்த மழையால் பிட்ச் ஈரப்பதத்துடன் பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்தது, எனவே டாஸ் வென்றால் பீல்டிங்கைத் தேர்வு செய்வோம் என்ற முடிவை மாற்றி திடீரென டாஸ் வென்று பேட்டிங் என்றார் வாசிம் அக்ரம், அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். 132ரன்களுக்குச் சுருண்டோம், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் இலக்கை எட்டி கோப்பையை வென்றது.

எனவே என்னைப்பொறுத்தவரையில் அந்தத் தோல்விக்கு இரு காரணங்கள், ஒன்று அணித்தேர்வு சரியில்லை. டாஸ் வென்று பவுலிங் சாதகப் பிட்சில் முதலில் பேட் செய்தது.

உலகக்கோப்பை முழுதுமே நாங்கள் ஒரு லோகாலிட்டி அணிபோல் காணப்பட்டோம்.

அதாவது ரெகுலரான தொடக்க வீரர் களமிறக்கப்பட வேண்டும், புதிய பந்தை உத்தியுடன் ஆடி அதை எதிர்கொள்ள திறமை தேவை என்ற நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஷாகித் அப்ரீடியைத் தேர்வு செய்தனர்.

பந்துகள் எழும்பாத ஸ்விங் ஆகாத பிட்சில் அவர் வாள் வீசுவார், ஆனால் பவுலர்களுக்கு உதவும் சூழ்நிலையில் அவருக்கு பேட்டிங்கும் வராது, பவுலிங்கும் வராது. வாசிம் அக்ரமுக்கு பதில் நான் கேப்டனாக இருந்தால் நான் முகமது யூசுப்படித்தான் தேர்வு செய்திருப்பேன்.

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு அணி என்று வாசிம் அக்ரமின் அணித்தேர்வுதான் அணிக்கு ஆப்பு வைத்தது என்று அமீர் சொஹைல் சரமாரியாக விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x