Published : 24 Jul 2020 03:54 PM
Last Updated : 24 Jul 2020 03:54 PM
2014 இங்கிலாந்து தொடருக்குப் பிறகே இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இன்றைய இந்திய வெற்றிக் கேப்டன்/பேட்ஸ்மென் விராட் கோலி தனக்கு சச்சின் கொடுத்த ஆலோசனைகளால் தான் இன்று இந்த இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2014 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்சில் 134 ரன்களை மட்டுமே கோலி எடுத்தா, அதோடு ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளை என்று பெயரெடுக்கும் அளவுக்கு அவரிடமே தொடர்ந்து ஆட்டமிழந்து கொண்டிருந்தார்.
ஆனால் 2018 தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஒருமுறை கூட விக்கெட்டை கோலி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தொடருக்குப் பிறகே சச்சின் டெண்டுல்கருடன் உத்தி ரீதியாக சில நாட்கள் தன்னை சரி செய்து கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ டிவிக்காக மயங்க் அகர்வாலுடன் உரையாடிய விராட் கோலி தெரிவித்த போது, “2014 தொடர் என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்.
எல்லா வீரர்களும் நல்ல தொடரைத்தான் மைல்கல் என்பார்கள், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 2014 தொடர் ஒரு மைல்கல்.
அந்தத் தொடருக்குப் பிறகு மும்பையில் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். ரவிசாஸ்திரியும் என்னையும் ஷிகர் தவணையும் அழைத்துப் பேசினார்.
சச்சின்பாஜியிடம் நான் ஆடும்போது என் இடுப்பு இருக்கும் நிலை பற்றி கொஞ்சம் பயிற்சி எடுக்கிறேன் என்றேன், அதற்கு சச்சின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது முன்னால் சென்று ஆடுவது பற்றியும் சில ஆலோசனைகளை வழங்கினார். இடுப்புப் பகுதியை சரி செய்தவுடன் முன்னால் வந்து ஆடுவது பற்றிய சச்சினின் ஆலோசனைகள் என் கரியரையே மாற்றி விட்டது.
அதன் பிறகு தன்னம்பிக்கை மிக்க பேட்ஸ்மென் ஆனேன், ஆஸ்திரேலியா தொடர் வந்தது.
களத்துக்கு வெளியே கடினமாக உழைத்து பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக இருந்தால் யாரும் நம்மை தோற்கடிக்க முடியாது” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT