Published : 21 Jul 2020 01:28 PM
Last Updated : 21 Jul 2020 01:28 PM

எம்.எஸ்.தோனி ஒரு பெரிய ஸ்டாராக வருவார் பாருங்கள்: அப்போதே கணித்த  ‘தாதா’ கங்குலி

தன் கேப்டன்சி காலத்தில் இளம் வீரர்களை அணியிலிருந்து நீக்கி விடும் அச்சுறுத்தலெல்லாம் விடுக்காமல் ஆதரித்து வளர்த்தெடுத்த வீரர்கள் நிறைய பேர். அதில் தோனியைப் பற்றியும் அவர் ஏற்கெனவே கணித்தது தற்போது வெளியாகியுள்ளது.

இரண்டு சாதாரண இன்னிங்ஸ்களுக்குப் பிறகு மற்றவர்கள் ஒரு வீரர் மீது நம்பிக்கையே இழப்பார்கள், ஆனால் கேப்டன் கங்குலி தன்னுடைய டவுன் ஆர்டரான 3ம் நிலையில் தோனியை அனுப்பி அவரது அதிரடி தாக்குதல் ஆட்டத் திறமையை உலகிற்கு பறைசாற்றினார்.

இது தொடர்பாக முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா கூறும்போது, தோனியை வந்தவுடனேயே கங்குலி அடையாளம் கண்டு கொண்டார்.

2004-ல் வங்கதேச விமானத்தில் நான் கங்குலியுடன் சென்ற போது என்னிடம் கங்குலி, ‘இப்போது ஒரு புதிய அதிரடி பேட்ஸ்மென் நம்முடன் இருக்கிறார். அவர் ஆட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும். எம்.எஸ்.தோனி ஒரு ஸ்டாராக உருவெடுப்பார்’ என்றார் கங்குலி என ஜாய் பட்டாச்சாரியா இப்போது தெரிவித்தார்.

3ம் நிலையில் கங்குலி தனக்குப் பதிலாக தோனியை அனுப்பிய போது 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். இதே 3ம் நிலையில் இறங்கிய போதுதான் தோனி தன் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 183 ரன்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x