Published : 18 Jul 2020 08:07 AM
Last Updated : 18 Jul 2020 08:07 AM
கரோனாவினால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து-மே.இ.தீவுகளிடையே தொடங்கியதை அடுத்து மற்ற நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளை மெல்லத் தொடங்க முடிவெடுத்துள்ளன.
தென் ஆப்பிரிக்காவிலும் புதுமையாக 3 அணிகள் ஒரே சமயத்தில் பங்கேற்கும் 3-டி (3T Cricket) கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளது.
இதில் டிவில்லியர்சின் டெகலாட் ஈகிள்ஸ், குவிண்டனின் மிஸ்டர் புட் கைட், கிளாசனின் அவுட்சூரன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
மொத்தம் 36 ஓவர்களே இந்தப் போட்டி 18, 18 ஓவர்களாக பிரிக்கப்பட்டு 3 அணிகளும் மோதும். ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இறங்கலாம்.
ஒவ்வொரு அணியும் 12 ஓவர்கள் விளையாடும். ஒரு அணிக்கு எதிராக 6 ஓவர்கள் ஆடிய பின் மற்றொரு அணியுடன் மீதமுள்ள 6 ஓவர்களில் ஆடும். இதன் மூலம் முதல் பாதியான 18 ஓவர்களை 3 அணிகளும் ஆடியிருக்கும்.
முதல் பாதியில் அதிக ரன்கள் எடுத்த அணி 2வது 18 ஓவர் மீதிபாதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும்.
ஒரு அணியில் 7 பேட்ஸ்மென்கள் அவுட் ஆகி விட்டால் கடைசியாக உள்ள பேட்ஸ்மெனின் ரன் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருக்க வேண்டும்.
முதல் பாதியில் 7 பேர் அவுட் ஆனால் இரண்டாவது பாதியில் மீதி பேட்ஸ்மென்கள் ஆட்டத்தை தொடரலாம். 12 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து.
ரன் அடிப்படையில் வெற்றி பெற்ற அணிக்கு தங்கம், மற்ற அணிகளுக்கு வெள்ளி, வெண்கலம் என்று பதக்கம் அளிக்கப்படும்.
முதலிடத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவருக்குச் செல்லும். 3 அணிகளும் சம ரன்கள் எனில் மூவரும் கோப்பையை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT