Last Updated : 19 Sep, 2015 04:27 PM

 

Published : 19 Sep 2015 04:27 PM
Last Updated : 19 Sep 2015 04:27 PM

நேச்சுரல் டேலண்ட் என்று என்னை முத்திரை குத்த வேண்டாம்: ரோஹித் சர்மா பாய்ச்சல்

ரோஹித் சர்மாவை கிரிக்கெட் உலகில் ‘நேச்சுரல் டேலண்ட்’ என்றும், 'கிஃப்டட்' வர்ணிப்பதுண்டு. இந்த முத்திரைகள் தனது திறமைக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பை மறுப்பதாக உள்ளது என்று அவர் சாடியுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவரும் கூறுகின்றனர், இவரிடம் அரிய திறமை உள்ளது, இயல்பான ஆற்றல் உள்ளது என்று அவர் இதைச் செய்வார், அதைச்செய்வார் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் வெளித்தோற்றத்துக்குப் பின்னால் உள்ளதை ஒருவரும் அறிவதில்லை.

இந்த ‘டேலண்ட்’ பேச்சு என்னைப் பொறுத்தவரையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நான் பந்து வீச்சாளராகவே கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். நான் பேட்ஸ்மேன் அல்ல. எனவே என்னைப்பற்றி ‘நேச்சுரல் டேலண்ட்’ என்றும் ‘கிஃப்டட்’ என்றும் ஊடகங்கள் எழுதுவது, பேசுவது நியாயமற்றதுடன் தவறானதும் கூட.

நான் கடுமையாக உழைத்து பேட்டிங்கில் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். நான் முன்பெல்லாம் 8-ம் நிலையில்தான் களமிறங்கி வந்தேன். அங்கிருந்து நான் பேட்டிங்குக்கு உயர்ந்துள்ளேன், என்னுடைய பயிற்சியாளர் தினேஷ் லாத்-ஐ கேளுங்கள். அவர் நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்றே கூறுவார்.

நான் என்ன சாதித்தேனோ அனைத்தும் எனது கடின உழைப்பினால்தான், எனது ஆட்டத்தை ‘சோம்பிய நளினம்’, நேர்த்தி என்றெல்லாம் நீங்கள் அல்லது தொலைக்காட்சியில் என்னை பற்றி வார்த்தை உருவாக்குவது தவறு, யாரைப்பற்றியும் இந்த வகையில் மதிப்பிடக் கூடாது.

விஷயத்தின் வேர் வரை செல்ல வேண்டும். நான் சீரியசான பேட்ஸ்மேனாக எனது அண்டர்-17 காலக்கட்டத்தில் ஆனேன். 2005-ம் ஆண்டு இலங்கை அணி இங்கு வந்திருந்த போது 50 ஓவர் போட்டி ஒன்றில் எனது நடுவிரல் பெயர்ந்தது. இந்தக் காயத்துக்குப் பிறகே பந்தை சரியாக கையில் பற்ற முடியவில்லை, அதன் பிறகே பேட்ஸ்மேனாக முடிவெடுத்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x