Published : 11 Jul 2020 03:22 PM
Last Updated : 11 Jul 2020 03:22 PM
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சைகள் கிளம்ப பிராடும் தான் கடும் கோபத்திலும் வெறுப்பிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மார்க் உட் 90+ வீசுபவர், எனவே அவர் தானாகவே அணியில் தேர்வு ஆகிறார், அப்போது ஆர்ச்சருக்கும் பிராடுக்கும் இடையில்தான் போட்டி, இதில் ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டதையடுத்தும் ஆர்ச்சர் பவுலிங்கில் விக்கெட்டே இல்லாமல் சொதப்பியதும் சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய வர்ணனையாளருமான டினோ பெஸ்ட், ஆர்ச்சரைக் கேலி செய்யும் விதமாக, “பிராட் ஆடாமல் ஆர்ச்சர் எப்படி ஆட முடியும்? மார்க் உட் 90+ கிமீ வேகம் வீசுகிறார். ஆனால் பிராட் வீசும் வேகம்தான் ஆர்ச்சர் வீசுகிறார். இதில் ஆர்ச்சரை தேர்வு செய்து பிராடை உட்கார வைப்பது நியாயமாகப் படவில்லை” என்று டினோ பெஸ்ட் ட்வீட் செய்து சீண்டினார்.
இதற்கு ஜோப்ரா ஆர்ச்சர் பதில் அளிக்கையில், “இவ்வளவு அறிவு இருந்தும் இன்னும் நீங்கள் ஏன் கோச் ஆகவில்லை?” என்று பதிவிட்டார்.
உடனே டினோ பெஸ்ட், “என்னை நேரடியாகக் குறிப்பிடாதே இளைஞனே, உண்மை என்னவெனில் உங்கள் பவுலிங் பற்பசை போல் உள்ளது, ஆஷஸ் தொடரிலிருந்தே நீங்கள் அதிக வேகம் வீசுவதில்லை. இப்போது போய் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்து கொண்டு வந்து மே.இ.தீவுகளின் 2வது இன்னிங்ஸில் ஒரு பந்தையாவது பீட் ஆகுமாறு வீசவும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT