Published : 10 Jul 2020 11:38 AM
Last Updated : 10 Jul 2020 11:38 AM

என் பெற்றோர் அனுபவித்த நிறவெறி வசைகள்: பேட்டியின் போது கண்ணீர் விட்ட மைக்கேல் ஹோல்டிங்

கடந்த காலங்களில் தன் பெற்றோர் எதிர்கொண்ட நிறவெறி அடக்குமுறை, வசைகளை நினைத்து பேட்டியின் போது முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கண்ணீர் விட்டார்.

இங்கிலாந்து ஊடகமான ஸ்கை நியூஸின் மார்க் ஆஸ்டினிடம் பேசிய மைக்கேல் ஹோல்டிங் தொலைக்காட்சி நேரலையிலேயே உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

கருப்பர்கள் உயிர் முக்கியம் போராட்டத்தில் கலந்து கொண்ட மைக்கேல் ஹோல்டிங் நியூயார்க்கில் வெள்ளை இனப் பெண் ஒருவர் “தன் வெள்ளை மேட்டிமையைக் குறிப்பிட்டு கருப்பரினத்தைச் சேர்ந்த ஒரு நபரை மிரட்டுகிறார், போலீஸைக் கூப்பிடுவேன் என்றும் கருப்பர் என்னை மிரட்டுகிறார் என்று போலீஸிடம் கூறுவேன் என்றும் அவரை மிரட்டுவதை நேரில் கண்டேன்.

அவர் வாழும் சமூகம் வெள்ளை இன மக்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தை வழங்காமல் அவர் எப்படி இவ்வளவு தைரியமாக கருப்பரினத்தவரை மிரட்ட முடியும்?

அவர் வாழும் சமூகத்தின் தன்னிச்சையான எதிர்வினை அது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் மாற்றம் எங்கிருந்து வரும்?

நிறவெறி பிறப்பிலேயே இருப்பதல்ல, சூழ்நிலை ஒருவரை நிறவெறியாளராக மாற்றுகிறது.

என்னுடைய வாழ்க்கையில் இது குறித்து உணர்ச்சிவயப்படும் தருணம் என் பெற்றோரை நினைக்கும் போது எனக்கு ஏற்படும். இப்போது அந்த நினைப்பு எனக்கு வருகிறது. என் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை நான் அறிவேன்.

என் அம்மாவின் குடும்பத்தினர் என் அம்மாவுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள், காரணம் என்ன தெரியுமா? என் அப்பா மிகவும் கருப்பாக இருந்ததே.

அவர்கள் எதையெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். அது எனக்கும் உடனடியாக நடந்தது.” என்றார் ஹோல்டிங் கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடியே.

அவர் மேலும் கூறும்போது, ‘மாற்றம் வர வேண்டும்... சமூகம் மாற வேண்டும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x