Published : 09 Jul 2020 03:44 PM
Last Updated : 09 Jul 2020 03:44 PM
சவுரவ் கங்குலி தான் கேப்டனாக இருந்த காலத்தில் அனுபவ வீரர்களையும் புதுமுக வீரர்களையும் சரி விகிதத்தில் களமிறக்குவார்.
கங்குலி கேப்டன்சியில்தான் சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், கைஃப், ஹர்பஜன் போன்ற டாப் வீரர்களை உருவாக்கி வளர்த்தெடுத்தார்.
இந்நிலையில் மயங்க் அகர்வாலுடனான வீடியோ உரையாடலில் கங்குலி கூறியது பிசிசிஐ டிவிக்காக பதிவு செய்யப்பட்டது.
அதில் மயங்க் அகர்வால் தற்போதைய இந்திய அணியில் நீங்கள் கேப்டனாக இருந்தால் இப்போதைய வீரர்களில் யார் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார், அதற்குக் கங்குலி, “இது கடினமான கேள்வி மயங்க், ஒவ்வொரு தலைமுறையிலும் வீரர்கள் வேறு. வேறுபட்ட தலைமுறையைச் சேர்ந்த வீரர்கள் வேறுபட்ட சவால்களை சந்திப்பார்கள்.
பிட்ச்கள், எதிரணியினரின் தரம், கிரிக்கெட் பந்து உட்பட மாறுபடும். என் காலத்திலும் கூகபரா, உங்கள் காலத்தில் முற்றிலும் மாறுபட்டது. பந்தின் தோல் மாறிவிட்டது. பந்தின் மேல் பகுதியில் உள்ள அரக்குப்பூச்சு மாறியுள்ளது. நகைச்சுவையாகக் கூற வேண்டுமெனில் இந்தத் தலைமுறை முந்திய தலைமுறையுடன் சிறந்தது என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அல்லது அந்த தலைமுறை இன்னொரு தலைமுறையைவிட பலவீனமானது என்றும் யாரும் உணரமாட்டார்கள். நாம் அவசியமின்றி அந்த வாதங்களுக்குள் செல்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அதில் அர்த்தமில்லை.
உங்களது இப்போதைய அணியிலிருந்து நான் விராட் கோலி, ரோஹித் சர்மா, உங்களை இப்போது நான் தேர்வு செய்ய மாட்டேன், ஏனெனில் நான் விரேந்திர சேவாகை இன்னொரு முனையில் என் கேப்டன்சியில் வைத்திருந்தேன். நீங்கள் என் 3வது தொடக்க வீரராக இருப்பீர்கள். பும்ராவை நிச்சயம் தேர்வு செய்வேன், ஏனெனில் இன்னொரு முனையில் எனக்கு ஜாகீர் கான் இருந்தார். ஸ்ரீநாத் ஓய்வு பெற்றதால் முகமது ஷமியைத் தேர்வு செய்வேன். என் காலக்கட்டத்தில் கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் இருந்தனர்.
இன்று அஸ்வின் என் 3வது ஸ்பின்னராக இருப்பார். ஜடேஜாவையும் தேர்வு செய்ய வேண்டும் போல்தான் உள்ளது.” என்றார் கங்குலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT