Published : 26 Jun 2020 04:43 PM
Last Updated : 26 Jun 2020 04:43 PM

சாத்தான்குளம் குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன்: ஷிகர் தவண்

சாத்தான்குளம் குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனைக் கண்டித்தன. காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெருமளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. தற்போது இது தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவணும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். நாம் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.

— Shikhar Dhawan (@SDhawan25) June 26, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x