Published : 13 Jun 2020 10:32 AM
Last Updated : 13 Jun 2020 10:32 AM
இந்தியாவின் மிக மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி இன்று காலமானார், அவருக்கு வயது 100. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
“வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.20 மணிக்கு வசந்த் ராய்ஜியின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. தெற்கு மும்பையில் உள்ள வல்கேஸ்வரில் இவர் காலமானார்” என்று இவரது மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார்.
வலது கை பேட்ஸ்மெனான ராய்ஜி 1940ம் ஆண்டுகளில் 9 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 277 ரன்களை எடுத்துள்ளார் அதிகபட்ச ஸ்கோர் 68 ஆகும். அவர் இந்திய கிரிக்கெட் கிளப் ஒன்றுக்காக அறிமுகமானார்.
மும்பை கிரிக்கெட்டுக்கு 1941ம் ஆண்டு அறிமுகமானார். விஜய் மெர்சண்ட் தலைமையில் ஆடினார்.
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்குபவரான இவர் சிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்தியா தன் முதல் டெஸ்ட்டை பாம்பே ஜிம்கானாவில் ஆடும்போது இவருக்கு வயது 13.
தெற்கு மும்பையில் சந்தன்வாதி இடுகாட்டில் இவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
இவருக்கு 100 வயதானதையொட்டு சச்சின் டெண்டுல்கரும், ஸ்டீவ் வாஹும் இவரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT