Last Updated : 19 Sep, 2015 07:37 AM

 

Published : 19 Sep 2015 07:37 AM
Last Updated : 19 Sep 2015 07:37 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: செக். குடியரசு- இந்தியாவுக்கு தலா ஒரு வெற்றி, சோம்தேவ் அபாரம்; யூகி பாம்ப்ரி தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி, இந்தியா-செக்.குடியரசு அணிகள் இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று ஒற்றையர் பிரிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.

முதல் போட்டியில் யூகி பாம்ப்ரி தோல்வியடைய, சோம்தேவ் தேவ்வர்மன் உலகத் தரவரிசையில் 40-=வது இடத்திலிருக்கும் ஜிரி வெஸ்லேவை வீழ்த்தி, இந்தியா சமநிலை வகிக்க காரணமாக இருந்தார்.

நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தி யாவின் முதல் நிலை வீரரான யூகி பாம்ப்ரி, சர்வதேச தரவரிசையில் 85-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் லூகாஸ் ரோஸலை சந்தித்தார்.

இப்போட்டியில், லூகாஸ் ரோஸல் 6-2, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதலிரு செட்களை எளிதில் இழந்த பாம்ப்ரி, மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 5-5 என்ற கணக்கில் சமநிலை வகித்தார். ஆனால், அதிக தவறுகளைச் செய்ததால் போட்டியில் தோல்வியடைந்தார். இப்போட்டி சுமார் ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடந்தது.

சோம்தேவ் அபாரம்

முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இக்கட்டான சூழலில் மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், உலக தரவரிசையில் 164-வது இடத்திலுள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தரவரி சையில் 40-வது இடத்திலுள்ள ஜிரி வெஸ்லேவைச் சந்தித்தார்.

இதில், சோம்தேவ் 7-6 (3), 6-4, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று, ஜிரி வெஸ்லேவுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த சீசனில் சோம்தேவுக்கு கிடைத்த பெரும் வெற்றி இது வாகும். தரவரிசை வெறும் எண் மட்டுமே என இப்போட்டியின்போது சோம்தேவ் நிரூபித்தார். டெல்லி யில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டிகளில் கடந்த 2010-லிருந்து சோம்தேவ் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. அதேசமயம் வெஸ்லே டேவிஸ் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இந்தப்போட்டியிலும் அவர் தோல்வியடைந்து அந்த சோக சாதனையைத் தொடர்கிறார் வெஸ்லே.

சோம்தேவ்-வெஸ்லே இடை யிலான ஆட்டம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.

முதல் போட்டியில் முதல் செட் 24 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. ஆனால், சோம்தேவ்-வெஸ்லே இடையிலான முதல் செட்டில் 27 நிமிடங்கள் கடந்த பிறகு முதல் செட்டில் 2-1 என்ற கணக்கில் புள்ளிகள் இருந்தன. அந்த அளவுக்கு இருவரும் போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர்.

இன்றைய போட்டி

இரண்டாவது நாளான இன்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி, செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்-ஆடம் பாவ்லாசெக் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளதால் இரட்டையர் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. டேவிஸ் கோப்பை தரவரிசையில் இந்தியா 21-வது இடத்தில் உள்ளது. செக். குடியரசு முதலி டத்தில் உள்ளது. மேலும், இந்த அணி இருமுறை பட்டம் வென்றிருப்பதால், இந்தியா வுக்கு இப்போட்டி மிகக் கடின மானதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x