

கோலியும் நானும் ஆடியிருந்தால் இருவரும் பஞ்சாபி என்பதால் களத்துக்கு வெளியே நண்பர்களாக இருந்திருப்போம் ஆனால் களத்திற்குள் நிச்சயம் இருவரும் வைரிகளாகவே இருந்திருப்போம் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வீடியோ பேட்டியில் சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் கோலி கூறியதாவது:
நானும் விராட் கோலியும் சிறந்த நண்பர்களாக ஆகியிருப்போம் ஏனெனில் நானும் அவரும் பஞ்சாபிகள். ஆனால் களத்தில் நிச்சயமாக நாங்கள் இருவரும் விரோதிகளாகவே இருந்திருப்போம்.
கோலியின் மண்டைக்குள் புகுந்து அவரை சீண்டுவதில் மும்முரம் காட்டியிருப்பேன். என் பந்துகளை நீங்கள் கட் ஷாட், புல் ஷாட் ஆட முடியாது என்று அவரைச் சீண்டியிருப்பேன்.
வைடு ஆஃப் த கிரீசிலிருந்து அவருக்கு பந்துகளை அவரை விட்டு விலகிச்செல்லுமாறு வீசியிருப்பேன், அவரை ட்ரைவ் ஆட வைப்பேன் என் வேகத்துக்கு அவருக்குப் பிடித்தமான அந்த ஷாட்டை ஆடவைத்து வீழ்த்துவேன்.
பிறகு களத்தில் நான் அவுருடன் பேசிக்கொண்டுதான் இருப்பேன், இதன் மூலம் அவரது கவனத்தை இழக்கச் செய்திருப்பேன்.கோலியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரை சவாலுக்குட்படுத்தும் போது அவர் கவனம் அதிகரிக்கும். ஆனால் நான் அவருக்கு எதிராக ஆடியிருந்தாலும் அவர் இப்போது எடுத்துள்ள ரன்களை எடுத்திருப்பார்.
அவர் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷேன் வார்ன் ஆகியோருக்கு எதிராக ஆடியிருக்க வேண்டும் என்று உண்மையில் ஆசைப்படுகிறேன். கோலியும் இந்தச் சவால்களை மகிழ்வுடன் எதிர்கொண்டிருப்பார் என்றே கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் அக்தர்.
பாகிஸ்தானுக்காக 224 போட்டிகளை சகல வடிவங்களிலும் ஆடியுள்ள அக்தர் சகல வடிவங்களிலும் 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.