Published : 16 May 2020 05:13 PM
Last Updated : 16 May 2020 05:13 PM
கரோனா வைரஸ் நிவாரணத்துக்காகவும் வளர்ச்சி அறக்கட்டளைக்காகவும் நிதி திரட்ட வங்கதேச விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் முஷ்பிகுர் ரஹிம் தனது பேட்டை ஆன்லைன் ஏலத்துக்கு விட்டார்.
2013-ல் இலங்கைக்கு எதிராக வங்கதேசத்தின் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் எடுத்த மட்டையை முஷ்பிகுர் ஆன்லைனில் ஏலம் விட்டார்.
ஆனால் சினிமாக்களில் வருவது போல் ஒரு குரூப் உள்ளே நுழைந்து மட்டையின் விலையை தாறுமாறாக ஏற்றி விட அது 50,000 டாலர்கள் வரை சென்றது. இதனையடுத்து ஏலத்தை நடத்திய ஏற்பாட்டாளர்கள் ஏலத்தையே நிறுத்தி விட்டனர்.
இதனையடுத்து முஷ்பிகுரை தொடர்பு கொண்டு அவரது அந்தப் பேட்டை 20,000 டாலர்களுக்கு ஷாகித் அஃப்ரீடி வாங்கியுள்ளார்.
“அஃப்ரீடி என்னைத் தொடர்பு கொண்டார், நான் அவருக்கு ஆன்லைன் ஏலத்தின் இணைப்பை அனுப்பினேன். மே 13ம் தேதி அவர் எனக்கு கடிதம் அனுப்பி 20,000 டாலர்கள் தருகிறேன் என்றார், இதே தொகைக்கு வாஙியும் விட்டார். உண்மையில் நான் சிறப்பானவனாக உணர்கிறேன்.” என்று முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார்.
ஷாகித் அப்ரீடி கூறும்போது, “கடினமான காலங்களில் வாழ்கிறோம் ஏழைகளுகு உதவுவதற்கான நேரம் இது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT