Published : 13 May 2020 04:39 PM
Last Updated : 13 May 2020 04:39 PM
டெஸ்ட் போட்டிகளில் தற்போது சிறந்த கேப்டன் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தான் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கிரிக்கெட் பண்பாட்டையே மாற்றி இந்திய அணியை ஒரு ஆதிக்க சக்தியாக மாற்றியுள்ளார் என்று அவரையும் புகழ்ந்துள்ளார் நாசர் ஹுசைன்.
நியூஸிலாந்து அணி இந்திய அணியை 2-0 என்று சமீப்த்தில் டெஸ்ட் தொடரில் ஊதியது. கோலியையும் மலிவாக வீழ்த்தி ஒரு சாதாரண பேட்ஸ்மெனையும் விட குறைவாக்கியது.
“சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் நிறைய விஷயங்களை ஒருவர் சரியாகச் செய்ய வேண்டியுள்ளது. இந்திய அணியை ஒரு நல்ல உடற்தகுதி அணியாக கோலி மாற்றினார், அணியின் பண்பாட்டை மாற்றினார், வெற்றி பெறும் மனநிலையை உருவாக்கியவர் விராட் கோலிதான்.
ஆனால் எனக்குப் பிடித்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேட்டால் நான் கேன் வில்லியம்சனைத்தான் கூறுவேன் அவர் கிரிக்கெட்டின் தூதர். உள்நாட்டில் அவர்களது வெற்றிச்சாதனை, சமீபத்தில் கோலியும் அங்கு வீழ்ந்தார். இங்கிலாந்து கண்டது.
உலகக்கோப்பை இறுதிக்குப் பிறகு கேன் வில்லியம்சனின் இமேஜ் உயர்ந்தது. அதுவும் தொடர் நாயகன் என்ற போது யார் நானா, நானா தொடர் நாயகன் என்று கேட்டது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இப்படி தன்னைத்தானே அடக்கத்துடன் குறிப்பிட்ட குணம் அதிசயிக்கத்தக்கது. வெளியில் அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதம் எல்லாம் அவரை கிரிக்கெட்டின் ஒரு தூதராகச் செய்துள்ளது என்றே கருதுகிறேன்” என்றார் நாசர் ஹுசைன்
——IANS
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT