Published : 09 May 2020 02:51 PM
Last Updated : 09 May 2020 02:51 PM
மேத்யூ ஹெய்டன் ஏற்கெனவே ஆள் வாட்டசாட்டமாக வயதுக்கு மீறிய உடல் கட்டமைப்புக் கொண்டவர், இதில் அவர் மங்கூஸ் ரக பேட்டை பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இதைக் கண்டு தோனியே அச்சப்பட்டு ஹெய்டனிடம் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதை மேத்யூ ஹெய்டன் தற்போது தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக மேட் ஹெய்டன் ஆடினார், 2010-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் சாம்பியன் ஆனது. அப்போது ஹேண்டில் நீளமாகவும் அடிப்பகுதி சற்றே அகலமாகவும் உள்ள மங்கூஸ் பேட்டை அவர் பயன்படுத்தினார்.
அந்த மட்டையில் பந்து பட்டால் சாதாரண மட்டையை விட 20 அடி கூடுதல் தூரம் பந்து பயணிக்கும். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக இந்த மட்டையைப் பயன்படுத்தி மேட் ஹெய்டன் 43 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். அப்போது அந்த மட்டை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் தோனி அப்போது கூறியதை நினைவு கூர்ந்த மேத்யூ ஹெய்டன், “இந்த மட்டையை நீங்கள் இனி பயன்படுத்தாமல் இருக்க உங்களுக்கு வாழ்க்கையில் தேவைப்படும் எதையும் நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
நான் இந்த மட்டையை ஒன்றரையாண்டுகளாக பயிற்சிக்காகப் பயன்படுத்தினேன். பந்து நடுமட்டையில் பட்டால் 20 அடி தள்ளிப்போகும்.
மங்கூஸ் மட்டைகள் நல்லதுதான். இதைப் பயன்படுத்த தைரியம் வேண்டும், நான் ஓரிருமுறைகள் பயன்படுத்தியுள்ளேன்.” என்றார்.
ஐபிஎல் 2010-ல் ஹெய்டன் 346 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT