Published : 02 May 2020 08:29 AM
Last Updated : 02 May 2020 08:29 AM

43 மாதங்கள் டெஸ்ட் ஆதிக்கத்துக்குப் பிறகு இந்தியா பின்னடைவு: டெஸ்ட் தரவரிசையில் ஆஸி.மீண்டும் நம்பர் 1- கணக்கீட்டில் குளறுபடி?

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 3ம் இடத்துக்குச் சரிந்துள்ளது, டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்து நம்பர் 1 ஆகத் திகழ்கிறது. டி20 தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா.

நியூஸிலாந்து 2ம் இடத்திலும் இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன. ஆனால் இந்த கணக்கீட்டு முறை 2016-17 சீசனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதில் இந்தியா 12-ல் வென்று ஒன்றில் மட்டும் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு இதில் சாதகம் ஏற்பட்டு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுடன் 2016-17-ல் ஆஸி. அணி தோற்றது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய சரிவு, காரணம் எந்தக் காலக்கட்டம் இந்தக் கணக்கீட்டில் வரவில்லையோ அந்த காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் தொடர்களை வென்றது, ஆனால் பிப்ரவரி 2019 முதல் 8 டெஸ்ட்களில் 6 டெஸ்ட்களை தோற்றது. இதில் இங்கிலாந்து, இலங்கை, இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. இதனையடுத்து டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா இலங்கைக்கும் கீழ் சென்று 6ம் இடத்தில் உள்ளது.

டெஸ்ட் தரவரிசை டாப் 5:

ஆஸ்திரேலியா
நியூஸிலாந்து
இந்தியா
இங்கிலாந்து
இலங்கை

ஒருநாள் தரவரிசை டாப் 5:

இங்கிலாந்து
இந்தியா
நியூஸிலாந்து
தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா

டி20 தரவரிசை டாப் 5:

ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்கா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x