Published : 28 Apr 2020 09:15 AM
Last Updated : 28 Apr 2020 09:15 AM

கோலியா, சச்சினா? ஹர்பஜனா, அஸ்வினா? - தர்மசங்கட கேள்விகளைக் கேட்ட யுவராஜ் சிங்கிற்கு பும்ராவின் தெளிவான பதில்

கரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருந்து பழகிவிட்ட விளையாட்டு வீரர்களும் நடிக நடிகையர்களும் சமூக ஊடகங்களில் ஜமாய்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் செயல்பூர்வமாக இருக்கும் யுவாரஜ் சிங், இந்திய இளம் வேகப்புயல் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேள்விகள் கேட்க பும்ரா பதில் அளித்தார்

அதில் இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தானே காரணம் என்று யுவராஜ் கேட்க அதற்கு பும்ரா, “ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தேன் என்பது ஒரு கதைதானே தவிர உண்மையல்ல, 2013, 14, 15-ல் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரெகுலராக ஆடவில்லை. விஜய் ஹசாரே ட்ராபி, உள்நாட்டு கிரிக்கெட்டில் சோபித்ததால்தான் இந்திய அணிக்குள் வர முடிந்தது.

சிலர் என்னிடம் ஒருநாள், டி20 கிரிக்கெட்டே போதும் என்ற ரீதியில் பேசினர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்தான் ஒருவரை நிறைவைடந்த வீரராக மாற்றுகிறது , என்றார்

மேலும் தர்மசங்கடமான கேள்விகளுக்கு பும்ரா அளித்த பதில்:

சச்சினா.. கோலியா? - நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது, அவர்களை மதிப்பிடும் திறன் என்னிடம் இல்லை. கோலி உட்பட உலகமே சச்சின் ரசிகர்களாக இருக்கின்றனர். எனவே சச்சினைத் தேர்வு செய்கிறேன்.

பிடித்த மிடில் ஆர்டர் யுவராஜா, தோனியா? -

நீங்கள் இருவரும் அணிக்காகச் சேர்ந்து ஆடி பெற்றுத் தந்த வெற்றிகளைப் பார்த்து வளர்ந்தவன் நான். நான் இருவருக்குமே ரசிகன், யாரைத் தேர்வு செய்வது? பெற்றோரில் சிறந்தவரைத் தேர்வு செய்யச் சொல்வது போன்றது.

சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜனா? அஸ்வினா?

ஏன் இப்படி சிக்கலான கேள்விகளாகக் கேட்கிறீர்கள். அஸ்வினுடன் ஆடியுள்ளேன், ஹர்பஜன் பந்து வீச்சை சிறுவனாக இருந்த போது பார்த்து ரசித்திருக்கிறேன். இதனடிப்படையில் ஹர்பஜனைத் தேர்வு செய்கிறேன்.

இவ்வாறு அந்த வீடியோவில் இருவரும் உரையாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x