Published : 28 Apr 2020 08:25 AM
Last Updated : 28 Apr 2020 08:25 AM

முட்டாள்கள் பட்டியலில் உமர் அக்மலும் இணைந்து விட்டார்: ரமீஸ் ராஜா கடும் தாக்கு

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சிக்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் 3 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளில் இரண்டு பிரிவுகளின் கீழ் உமர் அக்மல் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்க்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இவரைத் தடை செய்ததையடுத்து முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும்போது இவர்களையெல்லாம் சிறையில் தள்ள வேண்டும் என்றார். உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தன, ஒருமுறை சமீபமாக உடற்தகுதி மருத்துவர் உடல் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூற அவர் முன் ஆடைகளைக் களைந்து எங்கு உடல் கொழுப்பு இருக்கிறது என்று காட்டுங்கள் என்று கிண்டல் செய்ததும் பெரிய சர்ச்சையானது, ஆனால் அதிலிருந்து தப்பினார்.

இந்நிலையில் ரமீஸ் ராஜா கூறும்போது, “ஆகவே... உமர் அக்மல் அதிகாரப்பூர்வமாக முட்டாள்கள் பட்டியலில் இணைந்து விட்டார். 3 ஆண்டுகள் தடை. திறமை எப்படி வீணடிக்கப்படுகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க பாகிஸ்தான் சட்டமியற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. கம்பி எண்ண வேண்டியதுதான். இல்லையெனில் இன்னும் இது போன்ற சூதாட்டங்கள் நடந்து நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதுதான்.” என்றார்.

ஏற்கெனவே ஆமிர், ஷர்ஜீல் கான் ஆகியோரை மீண்டு சேர்த்ததற்காக ரமீஸ் ராஜா சாடிய போது, இந்த வீரர்கள் அணிக்குள் வரக்கூடாது, ஏதாவது மளிகைக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x