Published : 25 Apr 2020 06:14 PM
Last Updated : 25 Apr 2020 06:14 PM

கரோனாவுக்கு நிதி வேண்டுமென்றால் கிரிக்கெட் தேவையில்லை எல்லையில் தாக்குதலை நிறுத்துங்கள்: பாக். மீது கபில்தேவ்  காட்டம்

கரோனா வைரஸ் நிவாரணத்துக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடத்தலாம் என்ற கருத்தை மீண்டும் கடுமையாக நிராகரித்த இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் பணம் வேண்டுமெனில் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்போர்ட்ஸ் டாக்கில் கபில்தேவ் கூறும்போது, “நாம் உணர்ச்சிவயப்பட்டு ஆம் பாகிஸ்தான் இந்தியா போட்டி நடக்க வேண்டும் என்று கூறிவிடுவோம். கிரிக்கெட் ஆடுவது இப்போதைய முன்னுரிமை கிடையாது. உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்கள்” என்றார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் குண்டு வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. இதில் 3 கிராமத்தினர் பலியாகினர், இதில் இருவர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கபில் மேலும் கூறும்போது, ‘நமக்கு உண்மையில் பணம் தேவை என்றல் நிறைய மத அமைப்புகள் உள்ளன. அவர்கள் முன்வருவார்கள். இது அவர்களுடைய பொறுப்பு.

நாம் கோயில்களுக்கோ, புனிதத் தலங்களுக்கோ நாம் செல்லும் போதே நிறைய நன்கொடைகள் அளிக்கிறோம் எனவே அவர்களும் இப்போது நன்கொடை அளிக்க முன்வருவார்கள்.

நான் பரந்துபட்ட அளவில் பார்க்கிறேன். கிரிக்கெட் மட்டும்தான் நாம் பேசக்கூடிய விஷயமா என்ன? குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவர்கள்தான் நம் இளம்தலைமுறையினர். எனவே முதலில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும், கிரிக்கெட், விளையாட்டுக்கள் தானாகவே மீண்டும் ஆடப்படும்” என்றார் கபில்தேவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x