Published : 23 Apr 2020 01:51 PM
Last Updated : 23 Apr 2020 01:51 PM
2002- ஆண்டின் இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கும் கேப்டன் கங்குலிக்கும் ஒரு மைல்கல் என்றே கூற வேண்டும், டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியளித்து சமன் செய்த கங்குலி தலைமை இந்திய அணி நாட்வெஸ்ட் தொடர் இறுதியில் 324 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றிபெற்றதில் கைஃப், யுவராஜ் சிங்கின் சாதனை மகத்தானது. கங்குலி சட்டையைக் கழற்றி லார்ட்ஸ் பால்கனியில் பலருக்கும் அதிர்ச்சியூட்டியதோடு, இங்கு வந்திருந்த போது பிளிண்டாஃப் சட்டையை மைதானத்தில் கழற்றியதற்குப் பதிலடி கொடுத்தார்.
அதுவும் பாதி விக்கெட்டுகளை 150 ரன்களுக்குள் இழந்து தவித்த நிலையில் வெற்றி பெறவே முடியாத நிலையிலிருந்து நம்ப முடியாத வெற்றியை கைஃப்,யுவராஜ் பெற்றுத்தந்தனர்.
இந்த இன்னிங்ஸ் குறித்து யுவராஜ் சிங், கயீஃப் இருவரும் யூ டியுப் வீடியோ ஒன்றி உரையாடியதிலிருந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:
கைஃப் கூறும்போது தான் அடிக்கடி இந்த மேட்சின் ஹைலைட்சைப் பார்ப்பேன், கங்குலி அப்போது பால்கனியில் இருந்து கொண்டு சிங்கிள் எடு என்று செய்கை காட்டிக் கொண்டேயிருந்தார்.
யுவராஜ் சிங்: அந்த விவாதத்தை நாம் அப்புறம் எடுத்துக் கொள்வோம், நீங்கள் பேட் செய்ய வரும்போது என்னிட என்ன பேசினீர்கள் என்று நினைவிருக்கிறதா?
கைஃப்: பார்ட்னர்ஷிப் பில்ட் செய்வோம் என்றேன்.
யுவராஜ் சிங்: இல்லை இல்லை.. இருவரும் கிளவ்வை முட்டி பிணைப்பை வெளிப்படுத்தினோம், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால் நாம விளையாடுவோம் என்றீர்கள் நானும் நாம விளையாடுவோம் என்றேன் இதைத்தான் பேசினோம் பிறகு நன்றாக ரன்கள் ஓடினோம், நான் இடையிடையே பவுண்டரிகள் அடித்தேன். ஆனால் தாதா பெவிலியனிலிருந்து என்னிடம் ஸ்ட்ரைக் கொடுக்குமாறு உங்களை வலியுறுத்தினார், அடுத்த பந்து என்ன நடந்தது என்று கூறுங்கள் பார்க்கலாம்...
கைஃப்: அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் பந்து நான் எப்பவுமே ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட விரும்புவேன். அடித்தேன் நன்றாக மாட்டி பந்து சிக்ஸ் ஆனது.
யுவராஜ்: அப்ப என்னிடம் என்ன பேசினீர்கள் சொல்லுங்க பார்ப்போம்.
கைஃப்: சிங்கிள் சிங்கிள் எடுக்கலாம், மோசமான பந்துகளை அடிக்கலாம் என்றேன்.
யுவராஜ் சிங்: இல்லை இல்லை.. நீங்கள் என்ன சொன்னீர்கள் தெரியுமா? ஏய் நானும் ஆடத்தான் வந்திருக்கிறேன் என்றீர்கள்.. (இருவரும் சிரிக்கின்றனர்) தாதா அதன் பிறகு அமைதியாகி விட்டார் , நீங்களும் பெரிய ஷாட்களை ஆடுவீர்கள் என்றவுடன் தாதா பேசாமல் ஆகிவிட்டார்.
கைஃப்: அந்த ஷாட் மூலம் நான் உங்களுக்கு உறுதுணையாக ஆட முடியும் என்று தாதா உணர்ந்தார். இந்த ஷாட்டுகு முன்னால் ஒருவர் கையில் தண்ணீருடன் மெசேஜ் அளிக்க களம் புக தயாராக இருந்தார். என்னை சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை யுவராஜ் சிங்குக்கு கொடுக்கவும் என்ற செய்தி எனக்கு வந்தது. ஆனால் அந்த சிக்ஸருக்குப் பிறகு பெவிலியனில் யாரும் இடத்தை விட்டு அசைய வேண்டாம் என்றார் தாதா.
யுவராஜ்: அந்தப் போட்டி எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது, சச்சின் ஆட்டமிழந்தவுடன் இங்கிலாந்து வெற்றி பெற்றதைப் போலவே நடந்து கொண்டனர். ரோனி இரானி என்னிடம் வந்து இந்த டூரை நீங்கள் மகிழ்வுடன் ஆடியிருப்பீர்கள் இந்தியா திரும்பியதும் இதே மகிழ்ச்சியுடன் ஆடுங்கள் என்றார். ஏதோ தாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்றே இங்கிலாந்து நினைத்தனர்.
ஆனால் நாம் நன்றாக ஆடதொடங்கியவுடன் அவர்கள் பதற்றமடைந்தனர். ஆட்டம் கையை விட்டு போகிறது என்று அவர்கள் உணர்ந்து நம்மை இறுக்க முடிவெடுத்த போது நாம் நன்றாக செட்டில் ஆகிவிட்டோம். எனவே எதிரணியினர் அவ்வளவுதான் முடிந்து விட்டனர் என்று எந்த நேரத்திலும் நினைத்து விடக்கூடாது, இந்தியாவும் இப்படி ரிலாக்ஸ் ஆகி தோற்றுள்ளது. ஆட்டத்தில் எந்தத் தருணத்திலும் நாம் ரிலாக்ஸ் ஆகக் கூடாது என்பதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம்.
இவ்வாறு இருவரும் உரையாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT