Published : 19 May 2014 12:37 PM
Last Updated : 19 May 2014 12:37 PM
ஐபிஎல் இறுதிப்போட்டி ஏற்கெனவே முடிவு செய்தபடி வரும் ஜூன் 1-ம் தேதி பெங்களூரில்தான் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பையில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு ஐபிஎல் நிர்வாகம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில், இறுதிப் போட்டி பெங்களூரில்தான் என திட்டவட்டமாக ஐபிஎல் நிர் வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியதாவது:
“ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், இறுதிப்போட்டி பெங் களூரில்தான் நடத்தப்படும் என்ற முந்தைய முடிவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த மனதுடன் இறுதி செய்துள்ளனர். இறுதிப்போட்டிக்கான ஏற்பாடு களை ஆயத்தம் செய்வதற்கு போதிய அவகாசம் இல்லை. வரும் செவ்வாய்க்கிழமை வரை மும்பை யின் பதிலுக்காகக் காத்திருக்க முடியாது என்பதே இம்முடிவுக்கு முக்கியக் காரணம்” என்றார்.
இதனிடையே, ஐபிஎல் நிர்வாகத் தின் அனைத்து நிபந்தனைகளையும் மும்பை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. எனினும், இரவு 10 மணி வரை பட்டாசுகளை வெடிக்க மும்பை போலீஸின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்னும் பெறப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை கிரிக்கெட் வாரிய செயலர் நிதின் தலால் கூறுகையில், “ நாங்கள் ஐபிஎல் நிர்வாகத்தின் 14 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டோம். சரத்பவார் வரும் வாரத்தில் அனைத்து அனுமதி களையும் பெற்று விடுவார்” என்றார்.
ஐபிஎல் நிர்வாகத்தின் பெங் களூரில் இறுதிப்போட்டி என்ற முடிவு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுவதற்காக, வான்கடே மைதானத்தில் நுழைவதற்கு கொல்கத்தா அணியின் உரிமை யாளர் ஷாரூக்கானுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கவும் மும்பை கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT