Published : 17 Aug 2015 09:48 PM
Last Updated : 17 Aug 2015 09:48 PM
நடப்பு இந்திய அணி ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவது குறித்து இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி.
இந்திய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக திணறுகிறது...
ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவது நமது பெரிய பலம். இந்திய பிட்ச்கள் மாறிவிட்டன, சர்வதேச அணியில் இருக்கும் போது நிறைய சுழற்பந்து வீச்சை வீரர்க்ள் எதிர்கொள்வதில்லை.
கால்களை நகர்த்துவதில் பிரச்சினையா?
கால்களை சுறுசுறுப்பாக பயன்படுத்துவது உதவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் ஸ்பின் பந்து வீச்சை ஒவ்வொரு விதமாக விளையாடுவார்கள். நான் விளையாடிய காலத்தை எடுத்துக் கொண்டால் கூட லஷ்மண் கால்களை பயன்படுத்துவார், ஆனால் அதிகம் பயன்படுத்தமாட்டார். அவர் பந்துகளை நன்றாக ரீச் செய்வார், மேலும் கிரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னால் வந்தும் ஆடக்கூடிய திறனுடையவர். அவரிடம் ஸ்வீப் ஷாட் கிடையாது, ஆனால் பெரிய ஆன் டிரைவ் வீரர் அவர்.
எங்கள் அனைவரையும் விட சேவாக் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக நிறைய கால்களை நகர்த்தி எகிறி வந்து ஆடுவார். இடது கை ஸ்பின்னர்கள் வீசினால் முடிந்தவரை மேலேறி வந்தே கங்குலி ஆடுவார், ஸ்வீப் ஷாட் கைவசம் இருப்பது எப்போதும் உதவும்.
இப்போதைய பேட்ஸ்மென்கள் விரைவிலேயே ஸ்பின் வீச்சுக்கு எதிராக அதிகமான ஷாட்களை ஆடுகின்றனரோ?
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம். இப்போதெல்லாம் தொடக்கத்திலிருந்தே ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக அடித்து ஆடவேண்டும் என்ற மனோபாவம் நிலவுகிறது. சில வேளைகளில் நல்ல பந்துகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கப்படவேண்டும்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர்களை பேட்ஸ்மென்கள் எதிர்கொள்வதில்லை...
இன்னமும் ஒருசில அரிய ஸ்பின் பவுலர்கள் இருக்கின்றனர். ஆனால் எண்ணிக்கை குறைந்து விட்டது. டாப் 4 ஸ்பின்னர்கள் நன்றாக வீசுகின்றனர், ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் முன்பெல்லாம் நிறைய ஸ்பின்னர்கள் இருந்தனர்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த சுழற்பந்து வீச்சை நடப்பு பேட்ஸ்மென்கள் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். பிட்ச்களும் மாறிவிட்டது. நான் ஆடும்போதெல்லம் கடுமையாக பந்துகள் திரும்பும் ஆட்டக்களங்கள் இருக்கும்.
சர்வதேச பேட்ஸ்மென்கள் வரிசையே பிட்ச் கொஞ்சம் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தால் தடுமாறுகிறது...
டெஸ்ட் போட்டிகளில் இப்போதெல்லாம் நிறைய முடிவுகள் தெரிகிறது, ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடுகின்றனர். ஆனால் இதன் மறுபக்கம் என்னவெனில் கொஞ்சம் வேகம், ஸ்விங் அல்லது ஸ்பின் இருந்தால் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் நடப்பு சர்வதேச பிட்ச்கள் மட்டைபிட்ச்களாகவே உள்ளன. கடினமான பிட்சில் ஆடும்போது சிறப்பாக ஆடவேண்டும் என்ற சுயகர்வம் நிச்சயம் வேண்டும். அந்த விருப்பமும் ஆசையும் இருந்தால் அதற்காக பயிற்சி செய்ய தொடங்குவோம்.
எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் ஒருவரது ஆட்டம் அவரது தடுப்பு உத்தியைச் சுற்றித்தான் அமைய வேண்டும். அதிலிருந்துதான் ஆட்டம் விரிவடைய வேண்டும்.
பணக்கவர்ச்சி டி20 கிரிக்கெட், வீரர்களின் கவனத்தை டெஸ்ட் போட்டிகளிலிருந்து அகற்றி விட்டது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
முன்பெல்லாம் வெற்றிகரமான டெஸ்ட் வீரராக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கவனமாக இருக்கும். இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் இல்லாமலேயே நீங்கள் சம்பாதிக்க முடிகிறது.
பிறகு இவையெல்லாம் சுய-கர்வம் சம்பந்தப்பட்டது. கடினமான சூழல்களில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவது என்பது குறித்த சுய-பெருமிதம் ஒரு வீரருக்கு அவசியம்.
நல்ல ஃபுட்வொர்க் தேவை என்று கருதுகிறீர்களா?
நல்ல ஃபுட்வொர்க் என்பது பந்து எங்கு பிட்ச் ஆகும் என்பதை முன் கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப கால்களைக் கொண்டு செல்வது. அதாவது ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் பந்தின் அளவைக் கணித்து பின்னால் செல்ல வேண்டும் என்றால் பின்னால் செல்ல வேண்டும், அல்லது மேலேறி ஆட வேண்டும் என்றால் ஆடவேண்டும். நின்ற இடத்திலிருந்த படியே ஆடுவது தவறு.
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் திணறினார்களே...
பந்தை எதிர்கொள்ளும் போது தலையின் நிலை முக்கியம். பந்தை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பந்துக்கு குறுக்காகச் செல்லக் கூடாது. உடல் எடை பந்தை நோக்கி செலுத்தப்பட வேண்டும், குறுக்காக உடல் எடையை செலுத்தக் கூடாது.
உங்கள் தலை கீழே தொங்கி, உடலும் குறுக்காகச் சென்றால் உங்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பது தெரியாது. ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பதை உங்கள் தலையின் நிலையே தீர்மானிக்கும்.
வலது கண்ணை ஆஃப் ஸ்டம்ப் திசையில் வைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்...
அவர் கூறியிருப்து உண்மையில் அபாரமான அறிவுரை. வலது கண் உங்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற கவனத்தில் இருந்தால் வலது கண் திசைக்கு வெளியே இருக்கும் பந்துகளை எளிதில் ஆடாமல் விட்டுவிடலாம். ஆனால் நகர்ந்து குறுக்காகச் சென்றால் வலது கண் ஆஃப் ஸ்டம்ப் லைனை இழந்து விடும். இதனால்தான் வெளியே செல்லும் பந்துகளை ஆட முற்படுகின்றனர்.
பேட்டை உயர்த்திப் பிடிப்பதும் ஒரு பிரச்சினைதானோ?
மட்டை 2-வது ஸ்லிப் திசையிலிருந்து வந்து பிறகு நேராக மாறவேண்டும். ஹஷிம் ஆம்லாவின் மட்டை கிட்டத்தட்ட கல்லி இருக்கும் திசையிலிருந்து மெல்ல இறங்கி பிறகு நேராக வரும். நானும் முதல் அல்லது 2-வது ஸ்லிப்பிலிருந்து மட்டையைக் கொண்டு வந்து நேராக ஆடுவேன்.
நான் சரியாக ஆடாதபோது இதுதான் எனது பிரதான பிரச்சினையாக இருந்தது. அவ்வாறு மட்டையைக் கொண்டு வருவதில் டைமிங் சரியாக அமையாதபோது உள்ளே வரும் பந்துகளில் பவுல்டு, எல்.பி. ஆகத் தொடங்கினேன். இது எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டங்களில் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT