Published : 23 Aug 2015 04:19 PM
Last Updated : 23 Aug 2015 04:19 PM

412 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி டிக்ளேர்

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 412 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று இன்னமும் 27 ஓவர்களும் நாளை 90 ஓவர்களும் மீதமுள்ள நிலையில் 117 ஓவர்களில் இலங்கையை வீழ்த்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இன்று 70/1 என்று தொடங்கிய இந்திய அணி முரளி விஜய் (82), ரஹானே (126) ஆகியோரது அபார ஆட்டத்தினால் எழுச்சி பெற்றது. ரோஹித் சர்மா 34 ரன்கள் பங்களிப்பு செய்து மிகப்பெரிய ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹானே 243 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து கவுஷாலின் பந்தை டிரைவ் ஆடும் போது மட்டை விளிம்பில் பட்டு சண்டிமாலிடம் கேட்ச் ஆனது.

சஹா களமிறங்கி ஒரு ரன் ஓடி என்ன காரணத்தினாலோ ஆட முடியாமல் பெவிலியன் சென்றார், பிறகு மீண்டும் இறங்கினார், இந்தக் குழப்பம் தீருவதற்குள் கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது தற்போது.

பின்னி ரிவர்ஸ் ஸ்வீப்களாக அடித்து 17 ரன்களில் சோம்பேறித்தனமான ஷாட்டுக்கு பிரசாத் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஸ்வின், சமீராவை ஒரு டாப் எட்ஜ் சிக்ஸ் மற்றும் அருமையான ஆஃப் டிரைவ் ஆகியவற்றின் மூலம் 19 ரன்கள் எடுத்து பிரசாத் பந்தில் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிஸ்ரா 10 ரன்களில் பிரசாத்திடம் ஆட்டமிழக்க சஹா 13 நாட் அவுட். உமேஷ் யாதவ் நாட் அவுட் 8. இந்தியா 325/8 டிக்ளேர் செய்தது.

இலங்கை தரப்பில் பிரசாத் மற்றும் கவுஷால் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x