Published : 07 Apr 2020 06:10 PM
Last Updated : 07 Apr 2020 06:10 PM
உலகிலேயே பவுலிங் ஆக்ஷனில் பும்ரா எப்படி ஒரு அதிசயமோ அதே போல் பேட்டிங் ஸ்டான்ஸில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு அதிசயம், ஏனெனில் இந்த ஸ்டான்சில் பந்து வீசுவதற்கு முன்பாக ஏகப்பட்ட நகர்தல்களில் ரன்கள் அடிப்பது கடினம்.
சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரேட்கள் நிமிர்ந்துநில் நேர் கொண்ட பார்வையைக் கடைபிடிப்பவர்கள், ஆனால் ஸ்மித் கோணலாக நின்று கன்னாபின்னாவென ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்வது பவுலர்களின் கவனத்தைத் திசைத்திருப்பவே என்று பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் அவரே தன் பேட்டிங் ஸ்டைல் பற்றி விளக்கும் போது, “யார் வீசுகிறார்கள், பிட்ச் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொறுத்து நான் ஸ்கோர் செய்வதைத் தீர்மானிப்பேன்.
அனைத்தையும் விட முக்கியமானது எதிராளி என்னை எப்படி வீழ்த்த வியூகம் அமைக்கிறார் என்பதைப் பொறுத்து மூடிய ஸ்டான்ஸா அல்லது ஓபன் ஸ்டான்சா என்பது முடிவெடுக்கப்படும்.
பொதுவாக பந்து வரும் போது என் பின்னங்கால் ஆஃப் ஸ்டம்ப் அருகே வந்து விடும், ஏன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கூட சென்று விடும். என்னுடைய கண் பார்வைக்கு வெளியே செல்லும் பந்து ஸ்டம்பை தாக்காது என்பதே தாத்பர்யம்.
என்னைப் பொறுத்தவரை பந்து ஸ்டம்பைத் தாக்காது எனும் போது ஆட்டமிழப்பது வேஸ்ட். எனவே நான் அவுட் ஆகும் விதங்களைக் குறைப்பதற்காக நான் செய்யும் ட்ரிக் தான் இது. சில வேளைகளில் நான் எல்.பி.ஆகி விடுவேன். என் கண்பார்வை வரிசையில் பந்து இல்லையென்றால் நான் ஆட மாட்டேன். ஆடாமல் விட்டு விடுவேன்” என்கிறார் ஸ்மித்.
ஆனால் இதுவுமே பவுலர்களைக் குழப்புவதற்காக இருக்கலாம் இவரது பலவீனம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆகும் பந்துகள் ஆகும் அதைத் தவிர்க்க அனைவரையும் ஸ்டம்புக்குள் வீச வைக்க முயற்சி செய்யும் கூற்றாகக் கூட இது இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT