Published : 02 Apr 2020 06:53 PM
Last Updated : 02 Apr 2020 06:53 PM
2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்த தினம் இன்று. இதை ஒட்டி பலரும் இந்தியா உலகக்கோப்பையை வென்ற நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ ட்விட்டர் பக்கமும், கடைசியில் தோனி சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை இந்தியா தாண்டிய அந்த தருணத்தைக் குறிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "2011, இதே நாளில், லட்சக்கணக்கான இந்தியர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய ஷாட் இது" என்று குறிப்பிட்டிருந்தது.
இதைப் பகிர்ந்திருந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், "ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவுக்கு ஒரு சின்ன நினைவூட்டல். 2011 உலகக்கோப்பை ஒட்டுமொத்த இந்தியாவால், மொத்த இந்திய அணியால், அணியில் பணியாற்றியவர்களால் வெல்லப்பட்டது. உங்களுக்கிருக்கும் மோகத்தை சிக்ஸ் அடித்து விரட்டுவதற்கான நேரம் இது" என்று கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
நேரடியாக தோனி அடித்த சிக்ஸைப் பற்றி இவர் சொல்லவில்லையென்றாலும் சிக்ஸ் என்ற வார்த்தையை இவர் பிரயோகித்தது தோனியைக் குறிப்பிடுவதாகவே பலர் புரிந்துகொண்டுள்ளனர். இதனால் காலையிலிருந்து கவுதம் கம்பீரின் ட்விட்டர் பக்கத்தில் காரசாரமாக விவாதம் நடந்து வருகிறது.
நீண்ட நாட்களாகவே 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கவுதம் கம்பீரின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டு தோனியின் ஆட்டமும், அந்த சிக்ஸரும் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகின்றது என கம்பீர் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன் நீட்சியே கம்பீரின் இந்த ட்வீட்டும் என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
Just a reminder @ESPNcricinfo: #worldcup2011 was won by entire India, entire Indian team & all support staff. High time you hit your obsession for a SIX. pic.twitter.com/WPRPQdfJrV
— Gautam Gambhir (@GautamGambhir) April 2, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT