Published : 01 Apr 2020 04:43 PM
Last Updated : 01 Apr 2020 04:43 PM
யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார். அதாவது தன் காலத்தில் ஐபிஎல் இல்லை என்பதால் தன் ஹீரோக்களை டிவி மூலம் ஆடுவதைப் பார்த்து உத்வேகம் பெற்று, சில நாட்களிலேயே அவர்களுடன் சேர்ந்து ஆடும் பாக்கியம் கிடைத்தது, இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வீரர்கள், இளம் வீரர்கள் விரும்புவதில்லை என்கிறார் யுவராஜ் சிங்.
ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,
“நான் ஐபிஎல் இல்லாத போது 2000-ம் ஆண்டில் வந்தேன். நான் எனக்கு ஆதர்சமான வீரர்களை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தேன் ஒருநாள் அவர்களுக்கு அருகிலேயே வீரராக அமர்ந்தேன். அவர்களிடமிருந்து ஏகப்பட்டதைக் கற்றுக் கொண்டேன், அவர்கள் மீது ஏகப்பட்ட மரியாதை எனக்கு எப்போதும் உண்டு.
அவர்களிடமிருந்துதான் எப்படி நடந்து கொள்வது, மீடியாவிடம் எப்படி பேசுவது ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று மூத்த வீரர்களே அணியில் இல்லை, அனைவரும் சம வயதுடையவராக உள்ளனர்.
இன்று இளம் வீரர்க்ளுக்கு பணமழை ஐபிஎல் ஒப்பந்தங்கள் கிடைத்து விடுகின்றன, இந்தியாவுக்காக ஆடும் முன்னரே ஐபிஎல் மூலம் பணம் கொழிக்க தொடங்குகின்றனர். அதனால் 4 நாட்கள் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 4 நாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் குறித்தான இவர்களது அணுகுமுறை மோசமாக உள்ளது.
நான் டெஸ்ட் கிரிகெட் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தேன். 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடினேன். நான் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தேன் ஏனெனில் போட்டி அதிகமாக இருந்தது.
ஐபிஎல் பணமழை பொழிவதால் இளைஞர்களின் கவனத்தை திருப்பி விடுகிறது. இப்போதுள்ள வீரர்களைக் கூறவில்லை, ஆனால் இளம் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் மீது கவனம் செலுத்துகிறது. மாநிலங்களுக்கான 4 நாள் கிரிக்கெட்டில் ஆடுவதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT