Published : 30 Mar 2020 09:34 AM
Last Updated : 30 Mar 2020 09:34 AM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முனைப்பில் பலநாடுகளும் பயணங்களுக்கு தடை விதித்து விமானப்போக்குவரததை பெரிய அளவில் கட்டுப்படுத்தி வருகிறது, இந்நிலையில் ஆஸ்திரேலியா 6 மாத கால பயணத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை நீடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்று ஆடவிருக்கும் டெஸ்ட் தொடரும் பாதிக்கப்படலாம் என்று தற்போது கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய பயணத்தின் போது அக்டோபரில் முத்தரப்பு டி20 தொடருடன் தொடங்கி டெஸ்ட் தொடருடன் முடிவடைகிறது. இதற்கிடையே உலக டி20 போட்டித் தொடர் அக்.18-ல் தொடங்குமாறு வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா அரக்கன் நடத்தி வரும் கோரத்தாண்டவத்தை அடுத்து உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடப்பதும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 2,000த்திற்கும் அதிகமான கரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, 16 பேர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் 6 மாதகால பயணத் தடை என்பதால் எந்த அணியும் அங்கு செல்ல முடியாது. தற்போதைய நிலையில் எந்த ஒரு தொடரும் உறுதியில்லாத நிலையில் இல்லை என்ற இருண்ட நிலவரமே நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT