துருக்கியைச் சேர்ந்த 2 குத்துச் சண்டை வீரர்கள், பயிற்சியாளருக்குக் கொரோனா: அச்சுறுத்தலைப் புறக்கணித்த ஐஓசி மீது கடும் விமர்சனம்

துருக்கியைச் சேர்ந்த 2 குத்துச் சண்டை வீரர்கள், பயிற்சியாளருக்குக் கொரோனா: அச்சுறுத்தலைப் புறக்கணித்த ஐஓசி மீது கடும் விமர்சனம்
Updated on
1 min read

ஒலிம்பிக் பாக்சிங் தகுதிச் சுற்று போட்டிகளில் லண்டனில் கலந்து கொண்டு திரும்பிய 2 குத்துச் சண்டை வீரர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதனையடுத்து மருத்துவ எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

40 நாடுகளிலிருந்து சுமார் 350 குத்துச் சண்டை வீரர்கள் இந்த தகுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு 3 நாட்கள் நடந்து பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்போது தி கார்டியன் இதழ் செய்திகளின் படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச தடகள வீரர்களின் உயிருடன் விளையாடியிருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிட்டன் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் எங்கள் நாட்டு விலை மதிக்க முடியாத வீரர்களுக்கு கரோனா தொற்றியுள்ளது என்று துருக்கி குத்துச் சண்டை கூட்டமைப்பு சாடியுள்ளது.

இது குறித்து மேல் விவரங்கள் கிடைத்த பிறகு கருத்து கூறுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in