Published : 24 Mar 2020 11:48 AM
Last Updated : 24 Mar 2020 11:48 AM

இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போட்ட ‘நினைவுச்சின்ன’ தினம் எது? பிரெட் லீ பேட்டி

உலகிலேயே நினைத்ததை பட்டென்று மனதுக்குப் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்க வேகப்பந்து வீச்சுக்குச் சாதக ஆட்டக்களம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

மேலும் சமீபத்திய இந்திய வேகப்பந்து வீச்சு பும்ரா தலைமையில் மிகச்சிறப்பாகச் செயல் படுகிறது என்ற பிரெட் லீ, தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பிரத்யேக நீண்ட பேட்டியில், இந்திய கிரிக்கெட்டைப் புரட்டிப் போட்ட நினைவுச் சின்ன தினம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் இது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

இந்திய கிரிக்கெட் முன்னேறிய விதம் குறித்து எனக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது. 2001-ல் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இன்னிங்சில் ராகுல் திராவிடும், லஷ்மணும் (281) ஒரு நாள் முழுதும் எங்களை காய்ச்சினார்களே, விக்கெட்டையே கொடுக்காமல் ஒருநாள் முழுதும் ஆடினார்களே அந்தத் தினம்தான் இந்திய கிரிக்கெட்டைப் புரட்டிப் போட்ட நினைவுச்சின்ன தினம்.

அந்த நாள்தான் இந்திய அணியை வரைபடத்துக்குக் கொண்டு வந்த நாள். ஆஸ்திரேலியாவுடன் நாம் சவாலில் இறங்க முடியும், ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் என்று இந்திய அணி நம்பிக்கை பெற்ற நாள்.

1970-களில், 80களில் 90களில் இந்திய அணியில் நல்ல வீரர்கள் இருந்தாலும் நிச்சயம் இந்தியாவை தோற்கடித்து விடலாம் என்ற எண்ணமே அனைத்து அணிகளுக்கும் தலைதூக்கும்.

ஆனால் இப்போது விஷயமே வேறு, இந்தியா ஆதிக்கம் செலுத்திவருகிறது. நம் முகத்துக்கு நேராக நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனர், ஆனால் ஓவராகப் போய்விடவில்லை.

இந்திய அணி தற்போது கிரிக்கெட்டை ஆடிவரும் முறை பிரமாதம், ஆனால் வழிமுறைகளில் ஓவராக செல்வதில்லை.

இவ்வாறு கூறினார் பிரெட் லீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x