Published : 18 Mar 2020 02:00 PM
Last Updated : 18 Mar 2020 02:00 PM
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் டெஸ்ட் போட்டிகளை ஆடாத போது அதற்குப் பெயர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பா? இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி டாப் நிலையில் உள்ளது, இரண்டாவதாக நியூஸிலாந்து உள்ளது, பாகிஸ்தானுடன் டெஸ்ட்டில் ஆடாமலேயே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி சாம்பியன்ஷிப்பையும் வென்றால் அத் முழுமையானதா என்கிறார் வக்கார் யூனிஸ்.
வக்கார் இது தொடர்பாக கூறியதாவது:
சரி அரசுக்கு அரசுக்குமே ஒரு நிலையற்ற போக்குதான் உள்ளது. ஆனால் ஐசிசி இதில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப்பை இன்னும் முழுமையானதாக மாற்ற முடியும்.
ஐசிசி இதில் தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும், என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதாத ஒரு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது.
நான் இந்திய அணிக்கு எதிராகத்தான் அறிமுகமானேன் அதை என்னால் மறக்க முடியாது., என்றார் வக்கார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT